← Back to list
Zayn Rayyan மரணமடைந்த வழக்கில், குற்றவாளி அவனது தாயார்!
Oct 31, 2025

Influenza தொற்று நோயை கண்டறிய, சோதனை கருவிகளை வாங்குவதற்கு அல்லது பயன்படுத்துவதற்கு முன்பு, அவற்றின் பதிவு நிலையை முழுமையாக சரிபார்த்துக் கொள்ளவும் !
அவ்வாறு, மருத்துவ உபகரணங்கள் அதிகாரத் தரப்பு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
நாடு முழுவதும் உரிமம் பெற்ற மருந்தகங்களில் கிடைக்கும், அந்த தயாரிப்புகள் சட்டபூர்வமானவையா என்பதையும், பாதுகாப்பு தரநிலைகளுக்கு உட்பட்டவையா என்பதையும், உறுதிச் செய்து வாங்கும்படி, அது கேட்டு கொண்டது.
அங்கீகரிக்கபடாத அல்லது பதிவுச் செய்யப்படாத சோதனை கருவிகளைத் தவிர்க்க, மின்னியல் வர்த்தக தளங்கள் மூலம் அவற்றை வாங்குவதை தவிர்த்து கொள்ளும்படியும் அது, அறிவுறுத்தியுள்ளது.
பதிவுச் செய்யப்படாத Influenza சோதனைக் கருவிகளை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அது எச்சரி்த்தது.
--
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, 6 வயது சிறுவன் Zayn Rayyan மரணமடைந்த வழக்கில், அவனது தாயார் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது!
30 வயதான அவர் , Zayn Rayan-னுக்கு உடல் ரீதியாகக் காயம் ஏற்படும் அளவுக்கு அலட்சியப்படுத்தியது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக, Petaling ஜெயா session நீதிமன்றம், தீர்ப்பில் கூறியது.
சிறைத்தண்டனையை நிறுத்தி வைக்க கோரிய அவரது மனுவை நீதிமன்றம் நிராகரித்து, நேராக காஜாங் மகளிர் சிறைக்கு அனுப்பப உத்தரவிட்டது.
2023-ஆம் ஆண்டு டிசம்பரில், சிலாங்கூர் Damansara Damai-யில்,வீட்டிலிருந்து சுமார் 200 மீட்டர் தூரத்தில் உள்ள ஓடையில் Zayn Rayyan சடலமாகக் கண்டெடுக்கப்பட்டான்.
--
நாட்டில், இதுவரை ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட EV Charging எனப்படும் மின்சார வாகன மின்னூட்டு நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளதாக, முதலீடு வாணிப மற்றும் தொழில்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இவ்வேளையில் மின்சார வாகனங்களுக்கான சாலை வரி விலக்கு இவ்வாண்டு டிசம்பர் 31-ஆம் தேதியுடன் முடிவடையும் என்பதை உறுதிப்படுத்திய MITI, 2026 ஜனவரி 1 முதல் புதிய வரி முறை நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளது.
--
நாட்டில் இரண்டு மாநிலங்கள் வெள்ளத்தால் பாதிக்கபட்டுள்ளன.
கெடாவில், 457 பேரும் பேராக்கில் 129 பேரும் துயர் துடைப்பு மையங்களில் தங்கியுள்ளனர்.
--
ஜப்பானில் கரடி தாக்குதல்கள் கடுமையாக அதிகரித்து வருவதால், அந்நாட்டு அரசாங்கம், வேட்டைக்காரர்களை நியமிக்க திட்டமிட்டுள்ளது.
இவ்வாண்டு இதுவரை கரடிகளால் தாக்கப்பட்டு 12 பேர் உயிரிழந்துள்ளனர், குறைந்தது நூறு பேர் காயமடைந்துள்ளனர்.
அச்சம்பவங்களில் சில, மக்கள் கூட்டம் மிகுந்த நகரப்பகுதிகளிலும் நிகழ்ந்துள்ளன.
--
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather