← Back to list
மூவாயிரம், இந்திய மாணவர்களுக்கு புதிய மடிக்கணினி !
Oct 16, 2025

பொது மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களுக்குச் செல்லும் மூவாயிரம், இந்திய மாணவர்களுக்கு புதிய மடிக்கணினி வழங்கப்படவுள்ளது!
PERANTI MAHASISWA திட்டத்தின் மூலம் அது செயல்படுத்தப்படவுள்ளதாக, தொழில்முனைவோர் கூட்டுறவு மேம்பாட்டுத் துணை அமைச்சர் DS Ramanan Ramakrishnan தெரிவித்தார்.
கடந்த முறை 500க்கும் மேற்பட்ட தமிழ்ப் பள்ளிகளுக்கு புதுப்பிக்கப்பட்ட மடிக்கணினியை வழங்கியபோது, ஏன் புதிய மடிக்கணினியைக் கொடுக்கக்கூடாது, அரசாங்கத்திடம் பணம் இல்லையா என்ற கேள்விகள் எழுந்ததையும் ரமணன் சுட்டிக்காட்டினார்.
இதற்கு மாணவர்கள் விண்ணப்பிக்க தேவையில்லை.
தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த 3000 உயர்கல்வி கூட மாணவர்கள் இவ்வாண்டு டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் தங்களின் மடிக்கணினியை பெற்றுக் கொள்வர் என ரமணன் உறுதியளித்தார்.
-
நாட்டில், தற்போது 2.5 மில்லியன் மாணவர்கள், PTPTN, கடனுதவியைத் திருப்பிச் செலுத்தத் தொடங்கியுள்ளதாக உயர்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
என்றாலும், தமது தரப்பில், அந்த கடனுதவியை திருப்பி செலுத்த பல திட்டங்களை வழங்கிய போதிலும், PTPTN தொகையை வசூலிப்பது ஒரு சவாலாகவே இருந்து வருவதாக,அவ்வமைச்சு சாடியது.
கடந்த வாரம் 2026 பட்ஜெட்டை தாக்கல் செய்த போது, குறைந்த மற்றும் நடுத்தர வருமானக் குடும்பங்களைச் சேர்ந்த முதல் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, PTPTN கடன் விலக்கு அறிவிக்கப்பட்டது.
-
பள்ளி ஒன்றி்ல் அண்மையில் நிகழ்ந்த கொலை சம்பவம் குறித்து அதிகாரிகள் ஒருவரை ஒருவர் பழி சொல்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும்!
அவ்வாறு செய்வது பிரச்னைக்குத் தீர்வை தராது என்றும், பாதிக்கப்பட்ட இளையோரின் உண்மையான பிரச்னையைக் களையும் முயற்சியைத் தடைச் செய்யும் என்றும், மகளிர் குடும்ப சமூக மேம்பாட்டு அமைச்சர் எச்சரித்தார்.
இவ்விவகாரத்தில் ஆசிரியர்கள், பெற்றோர், சமூகத் தலைவர்கள், அரசாங்கம் என அனைவரும் கைகோர்க்க வேண்டியது அவசியம் என அவர் வலியுறுத்தினார்.
அண்மையில் சிலாங்கூர், PJவில் உள்ள பள்ளி ஒன்றில், 14 வயது மாணவன் சக மாணவி ஒருத்தியை கொலை செய்த சம்பவம் நாட்டை உலுக்கியது.
-
இதனிடையே, சிலாங்கூரில், பள்ளி நேரங்களில், பாதுகாப்பை வலுப்படுத்த , பள்ளி வளாகங்களில் காவல்துறை தொடர்ந்து நடமாடும் ரோந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாநில காவல் துரை தெரிவித்துள்ளது.
-
இவ்வேளையில், பகடிவதைச் சம்பவங்களை விரைவாகவும், உடனடியாகவும் கையாள,பகடிவதை நடுவர் மன்ற மசோதா இறுதி செய்யும் கடைசிக் கட்டத்தில் இருப்பதாக, சட்ட சீர்த்திருத்த அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather