← Back to list
நிக்கோத்தின் திரவத்திற்கு 10 மடங்கு வரி !
Oct 07, 2025

மின் சிகரெட் மற்றும் வேப் பயன்பாட்டில் உள்ள நிகோடின் திரவத்திற்கு, 10 மடங்கு அதிக வரி விதிக்க, சுகாதார அமைச்சு பரிந்துரைத்துள்ளது !
தற்போதைய 40 சென் வரியை, ஒரு மில்லிலிட்டர் நிக்கொதினுக்கு, 4 ரிங்கிட்டாக உயர்த்த KKM பரிந்துரைத்தது.
அப்பரிந்துரை, 2026 வரவு செலவு திட்டத்தில் சேர்க்க, நிதி அமைச்சிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
நுரையீரல் நோய் சிகிச்சைக்கு, இதுவரை 240 மில்லியன் ரிங்கிட்டுக்கும் மேல் செலவிடப்பட்டுள்ளதாக, KKM கூறியது.
இப்பிரச்சனை தொடர்ந்து கொண்டே போனால், 2030-ஆம் ஆண்டுக்குள், அந்நோய் சிகிச்சைக்கு 300-இல் இருந்து 400 மில்லியன் ரிங்கிட் வரை செலவாகலாம் என அது சொன்னது.
-----------
இதனிடையே, மின் சிகரெட் மற்றும் வேப் பயன்பாட்டை முழுமையாகத் தடை செய்ய, இவ்வாண்டுக்குள் அமைச்சரவைக்கு நினைவுப்பத்திரம் சமர்ப்பிக்கப்படும் !
இளைய தலைமுறையின் சுகாதாரத்தை பாதுகாக்க, சுகாதார அமைச்சு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை எதிர்பார்க்கிறது.
--------
அதிகாரப்பூர்வ அரசாங்க நிகழ்வில், மதுபானம் பறிமாறப்பட்டது குறித்து, சுற்றுலா, கலை, பண்பாட்டு அமைச்சுக்கும், அதன் அமைச்சர் Datuk Seri Tiong King Sing-க்குக்கு, பிரதமர் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார் !
அரசாங்க நிகழ்வில் மதுபானத்திற்கு அனுமதியில்லை என்ற அரசாங்கத்தின் நிலையை சுட்டிக்காடிய பிரதமர், நிகழ்ச்சியின் அதிகாரப்பூர்வ அங்கம் முடிவுற்ற பின்னரே மதுபானம் இருந்ததாக அவ்வமைச்சு விளக்கம் கொடுத்தது பொறுத்தமற்றது, என்றார்.
-----------
மலேசிய நகைச்சுவை நடிகர் சத்தியா, 23 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று, நலமாக வீடு திரும்பியுள்ளார் !
அவர் மருத்துவமனையில் இருந்தபோது ராகா செய்தி பிரிவு எடுத்த நேர்காணலை, Syok செயலி மற்றும் ARN செய்திகள் TikTok-கில் காணலாம்.
-----------
இந்தோனேசியாவில் உள்ள மதப் பள்ளியொன்றின் கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவத்தில் சிக்கியவர்களை, தேடி மீட்கும் பணிகள் முடிவடைந்துள்ளன !
அதில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அறுபத்து ஏழானது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather