← Back to list
சட்டங்களில் எவ்வித மாற்றமும் செய்யப்படாது!
Sep 23, 2025

வயது குறைந்தோரை உடப்டுத்திய பாலியல் வன்கொடுமை, தொடர்பிலான சட்டங்களில் எவ்வித மாற்றமும் செய்யப்படாது!!
அதன் தொடர்பிலான சட்டங்களில் அனைத்துலக தரநிலைகளே பின்பற்றப்படும் என சட்ட விவகாரங்களுக்கான பிரதமர் துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
நேற்று, கிளந்தான் மாநில காவல் துறை தலைவர் பாலியல் வன்கொடுமை சட்டங்களில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என பரிந்துரை செய்தது, அவரது தனிப்பட்ட கருத்து மட்டுமே என அமைச்சு சாடியது.
சட்டங்களில் மாற்றம் செய்ய வேண்டுமென்றால் அது, உரிய சட்ட சீர்திருத்தக் குழுவின் மூலம் முன்னெடுக்கப்பட வேண்டும் என அவ்வமைச்சு விளக்கியது.
முன்னதாக, கிளந்தானில்,நிகழும் சிறார் வன்கொடுமை சம்பவங்கள் பெரும்பாலானவை இரு தரப்பினரின் ஒப்புதலின் அடிப்படையிலே ஏற்படுவதாக கூறிய மாநில காவல் துறை தலைவர் , சமந்தப்பட்ட இரு தரப்பினரும் தண்டிக்கப்பட வேண்டும் என பரிந்துரைச் செய்தார்.
--------
மலேசியாவில் இசை நிகழ்ச்சிகளை வழிநடத்தும் வெளிநாட்டு கலைஞர்களுக்கான புதிய உடை விதிமுறைகள் அமுல்படுத்தபடும்.
அவ்விதி, நடனம் மற்றும் மேடையில் நிகழ்ச்சிகளைப் படைக்கும் கலைஞர்களுக்கு மட்டுமே, தவிர பங்கேற்கும் ரசிகர்கள் மீது எந்த விதிமுறையும் அமல்படுத்தப்படாது என தொடர்புதுறை அமைச்சு தெரிவித்துள்ளது.
அது, பல்லின மக்களைக் கொண்ட மலேசியர்களுக்கு மதிப்பளிகும் வகையில், கலை நிகழ்ச்சிகள் நடைபெறுவதை உறுதி செய்யும் நோக்கிலானது.
----------
இவ்வேளையில், Meta நிறுவனத்தை கடுமையாக கண்டித்துள்ளது, தொடர்புத் துறை அமைச்சு.
Meta அதன் அதிகாரப்பூர்வ தளங்களில் இணைய சூதாட்டம் மற்றும் மோசடி தொடர்பிலான உள்ளடக்கங்களை அகற்றத் தவறியதே அதற்கு காரணம்.
மேலும், Meta தனது உள்ளடக்க கண்காணிப்பு முறைகளை மேம்படுத்தத் தவறினால், மேல்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சு எச்சரித்துள்ளது.
அந்த உள்ளடக்கங்களை அகற்ற Meta நடவடிக்கை எடுத்திருந்தாலும், சில சட்டவிரோத உள்ளடக்கங்கள் இன்னும் அதன் Facebook வலைத்தளத்தில் இருப்பதையும் அமைச்சு சாடியது.
-----------
இன்று தொடங்கி அக்டோபர் 7 வரை ஷிப் பிரச்சனைகள் கொண்ட Mycard அடையாள அட்டைகளை இலவசமாக மாற்றி கொள்ளலாம்.
நாடு முழுவதும் உள்ள அனைத்து தேசிய பதிவுத்துறை முனையங்களிலும் அச்சேவை வழங்கபடுவதாக, உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
BUDI95 திட்டத்தில் யாரும் நிராகரிக்கப்படாமல் அனைவரையும் அச்சலுகை சென்று சேர வேண்டும் எனும் நோக்கில் அவ்வாறு செய்யப்படுகிறது.
-------
திரங்கானுவில், ECRL கிழக்கு கரை ரயில் இணைப்பு பகுதியில் கசிவு ஏற்பட்டதாக கூறப்படும் Butane வகை எரிவாயு கழிவுகளை அப்புறப்படுத்தபடும்.
அதற்கு குறைந்தது இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்கள் ஆகும் என மாநில காவல் துறை தெரிவித்துள்ளது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather