← Back to list
சபாவில் வெள்ளம் !
Sep 12, 2025

பகடிவதையால் பாதிக்கப்படுபவர்களுக்கு உதவும் தரப்பினர்களில், நண்பர்களின் பங்கும் அளப்பரியது என, மலேசிய மனித உரிமை ஆணையமான SUHAKAM-மின் கொள்கைப் பிரிவின் முதன்மை உதவிச் செயலாளர், பரமேஸ்வரி சுப்ரமணியம் தெரிவித்துள்ளார் !
பகடிவதையால் பாதிக்கப்பட்ட நண்பர்களுடன் அமர்ந்து, நான்கு நல்ல வார்த்தைகளைக் கூறி, அவர்களுக்கு மனபலத்தை கொடுக்க வேண்டும் என அவர் கூறினார்.
அதிலும் முக்கியமாக, பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் அனுபவங்களை பகிரும்போது, கேலி செய்யாமல் கவனமாகக் கேட்பது, அவர்களுக்கு நம்பிக்கையும் பாதுகாப்பும் அளிக்கும், என்றாரவர்.
அண்மையில், கல்வி நிறுவனங்களில், பகடிவதைச் சம்பவங்கள் அதிகம் நிகழ்ந்து வருவதை அடுத்து, நண்பர்கள் ஒரு மனநல ஆதரவாளராக செயல்பட வேண்டும் என, பரமேஸ்வரி ராகா செய்தி பிரிவிடம் அவ்வாறு பகிர்ந்துகொண்டார்.
--------
சபாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணப் பணிகளை தீவிரப்படுத்தும்படி, பிரதமர் அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டுள்ளார் !
அங்கு நிலைமை சீரடையும் வரை, நிவாரண மையங்களுக்கு அடைக்கலம் நாடி சென்றவர்களுக்கு, சிறந்த உதவிகள் சென்று சேருவதை அதிகாரிகள் உறுதிச் செய்ய வேண்டும் என Datuk Seri Anwar Ibrahim கூறினார்.
அதிக ஆபத்துள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் விழிப்புடன் இருக்கவும், எந்தவொரு வெளியேற்ற உத்தரவுகளுக்கும் இணங்கவும் அவர் அறிவுறுத்தினார்.
தற்போது வரையிலான நிலவரப்படி, அம்மாநிலத்தில் 400-க்கும் மேற்பட்டோர், வெள்ள நிவாரண மையங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
--------
இதனிடையே, கெடா, பினாங்கு, பேராக் உட்பட, சில மாநிலங்களின் பெரும்பாலான பகுதிகளில், கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது !
அப்பகுதிகளில், இன்றிரவு 8 மணி வரை, இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது !
---------
தேசிய மாதத்திற்கு அப்பால், ஜாலூர் கெமிலாங் தேசிய கொடியை பெருமையுடன் பறக்கவிட்டு, தேசப் பற்றை நாள்தோறும் வெளிக்கொணரும்படி, அனைத்து மலேசியர்களையும் தொடர்புத்துறை அமைச்சர் Datuk Fahmi Fadzil, கேட்டுக்கொண்டுள்ளார் !
தேசிய கொடி, தேசிய அடையாளம் மட்டுமல்ல, நாட்டு மக்களின் ஒற்றுமையையும் பிரதிபலிக்கிறது, என்றாரவர்.
--------
2024-ஆம் ஆண்டுக்கான மலேசியா மகிழ்ச்சி குறியீட்டின்படி, திரங்கானு, ஜோகூர், நெகிரி செம்பிலான் ஆகியவை, நாட்டின் மிக மகிழ்ச்சியான மாநிலங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன !
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather