← Back to list
பகடிவதை எதிர்ப்பு நடுவர் மன்ற சட்ட மசோதா !
Sep 08, 2025

பகடிவதை எதிர்ப்பு நடுவர் மன்ற சட்ட மசோதா, அடுத்த மாத நாடாளுமன்ற கூட்டத்தில் தாக்கல் செய்யப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது !
இந்த மசோதாவிற்கான திட்டங்களை வரைவதற்கு, தனக்கு ஆறு மாத கால அவகாசம் வழங்கப்பட்டதாக சட்ட சீர்திருத்த அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஆனால், அதற்கு முன்னதாகவே தாம் அதனை இறுதிச் செய்து நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வேன் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
அம்சோதா தொடர்பில், தற்போது பல்வேறு தரப்பினருடன் சந்திப்புகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்வுகள் நடைபெற்று வருவதாக அவர் சொன்னார்.
பொதுமக்கள், அது குறித்த தங்கள் கருத்துகளையும் பரிந்துரைகளையும் சமர்ப்பிக்க ஒரு தளம் ஒன்றை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
பகடிவதை மற்றும், அதனால் பாதிக்கப்படுபவர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் ஏற்படும் எதிர்மறை விளைவுகளை தடுக்க, அந்தச் சட்ட மசோதாவை உருவாக்குவது முக்கியம் என அரசாங்கம் முன்னதாக தெரிவித்திருந்தது.
--------
Zara Qairina விவகாரம் தொடர்பில் 61 வயது முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் !
அந்நபர், அம்மாணவியின் மரண விசாரணையில் சாட்சியளித்த நிபுணர் மருத்துவருக்கு, மரண மிரட்டல் விடுத்ததாக கூறப்படுவதே அதற்குக் காரணம் என காவல்துறை தெரிவித்துள்ளது.
சபாவில், கடந்த மாத தொடக்கத்தில், பகடிவதை செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்படும், 13 வயது Zara, பள்ளி தங்கும் விடுதி அருகே சியநினைவற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்டாள்.
--------
பேராக் Parit-டில், ஆற்று மணல் சேகரிக்கும் இடத்தில், அகழ்வாராய்ச்சி மற்றும் குழாய் பொருத்தும் பணியில் இருந்த நபர்களில் ஒருவர், மண்ணில் புதையுண்டு உயிரிழந்துள்ளார் !
மேலும் மூவர் மீட்கப்பட்டதாக தீயணைப்பு மீட்புத் துறை தெரிவித்துள்ளது.
-----------
SARA மற்றும் MyKasih உதவித் திட்டங்களின் கீழ், பொருட்களின் விலை உயர்வு தொடர்பில் இரண்டு புகார்கள் பெறப்பட்டுள்ளதாக, உள்நாட்டு வாணிப, வாழ்க்கைச் செலவீன அமைச்சு தெரிவித்துள்ளது !
வணிகர்கள் அத்திட்டங்களை தங்கள் வசப்படுத்திக்கொண்டு, பொருட்களின் விலைகளை அதிகரிப்பதைத் தடுக்க, அதிகாரிகள் கண்காணிப்பு நடவடிக்கைகளை அதிகரித்து வருகின்றனர்.
-----------
இதனிடையே, கெடாவில், SARA திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 100 ரிங்கிட் மதிப்புள்ள அத்தியாவசியப் பொருட்களை சிலர் வாங்கி, அதை மறு விற்பனை செய்து ரொக்கமாக மாற்றும் செயல்கள் கண்டறியப்பட்டுள்ளன !
இச்செயலில் ஈடுபடுவோர் பெரும்பாலும், இன்னும் திருமணமாகாதவர்களே என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather