← Back to list
மலேசியாவில் ஓணம் பண்டிகை !
Sep 05, 2025

உலகம் முழுவதும் இன்று ஓணம் பண்டிகை மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது !
குறிப்பாக இந்தியா கேரளா மட்டுமின்றி, மலேசியாவில் உள்ள மலையாள அன்பர்களும், அப்பண்டிகையைக் கொண்டாடி வருகின்றனர்.
கேரளாவில் மக்கள் 10 நாட்கள் விரதம் இருந்த பின்னர் தான் அப்பண்டிகையைக் கொண்டாடுவர்; ஆனால் மலேசியாவில் அந்த நாளன்று தான் பல்வேறு உண்வுகளை சமைத்து, மலையாள மக்கள் மிகவும் விஷேஷமாக கொண்டாடுவர் என, அப்பண்டிகையைக் கொண்டாடி வரும் Skudai-யைச் சேர்ந்த Chandrika Nambiar கூறினார்.
காலையிலேயெ எழுந்து, புத்தாடை அணிந்து, பலவகை பாரம்பரிய உணவுகளைத் தயாரித்து, இன்றைய புனிதமான நாளை குடும்பத்துடன் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகிறோம் என, சந்திரிக்கா ராகா செய்தி பிரிவிடம் பகிர்ந்துகொண்டார்.
--------
தலைநகரில் கண்டுபிடிக்கப்பட்ட பிரிட்டிஷ் பையன், மலேசியாவுக்கு வந்ததற்கு, அவரது குடும்பத்தினருடனான கருத்து வேறுபாடே காரணம் என நம்பப்படுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது !
நேற்று அந்த 17 வயது வாலிபன், Jalan Pudu-வில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில், பாதுகாப்பாக கண்டெடுக்கப்பட்டான்.
---------
நாடு முழுவதும் நேற்று மட்டும், கிட்டத்தட்ட ஈராயிரம் சாலை விபத்துகள் பதிவு செய்யப்பட்டன; அதில் 12 மரணங்கள் பதிவாகின !
--------
சிலாங்கூர் ஷா அலாமில், முறையான உரிமம் இல்லாமல் பேருந்து ஓட்டி வந்த இலங்கை நாட்டு நபர் ஒருவர் கைதாகியுள்ளார் !
----------
இன்று முதல், ஞாயிறு 7-ஆம் தேதி வரை, MITEC-கில் இவ்வாண்டின் மிகப்பெரிய MATTA கண்காட்சியை நடத்தவிருக்கிறது, மலேசிய விமான போக்குவரத்து குழு (MAG)!
செயற்கை நுண்ணறிவு தயாரிப்பிலான பயண அனுபவங்கள், கழிவுகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களை அக்கண்காட்சி உட்படுத்தியிருக்கும்.
30 விழுக்காடு வரையிலான விமான கட்டண கழிவு, Malaysia Airlines, Firefly, MASwings போன்ற, MAG கீழ் செயல்படும் நிறுவனங்களின் சிறப்புக் கழிவு ஆகியவற்றை வருகையாளர்கள் அனுபவிக்கலாம்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather