← Back to list
மலேசியாவுக்கு 19% வரி !
Aug 01, 2025

அமெரிக்க அதிபர் Donald Trumph கையெழுத்திட்ட நிர்வாக உத்தரவுகளுக்கு இணங்க, மலேசியா மீது பத்தொண்பது விழுக்காட்டு வரி விதிக்கப்பட்டுள்ளது!
முன்னதாக, மலேசிய இறக்குமதி பொருட்களுக்கு அமெரிக்கா 25 விழுக்காட்டு வரி விதிக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
நிதியமைச்சர் Tengku Datuk Seri Zafrul Tengku Abdul Aziz தலைமையிலான நீண்ட கால பேச்சு வார்த்தைக்குப் பிறகு, தற்போது அதன் விகிதம் 19 விழுக்காடாகக் குறைந்திருக்கிறது.
இப்புதிய வரி நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்காத வண்ணம் இருக்கும் என தாம் எதிர்ப்பார்ப்பதாக இதற்கு முன் பிரதமரும் அதிபர் டிரம்புடனான தொலைப்பேசி அழைப்பில் பேசியிருந்தார்.
அதன் பலனாக, இன்று அமுலுக்கு வரும் அந்த வரி 19 விழுக்காடாகக் குறைந்துள்ளது.
இன்னும் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத அல்லது டிரம்ப் நிர்வாகத்திடமிருந்து கட்டண அறிவிப்பைப் பெறாத நாடுகள், விரைவில் அமெரிக்காவிடமிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பெறும் என வெள்ளை மாளிகை அறிக்கை ஒன்றின் வழி தெரிவித்துள்ளது.
---------
வயதான காலத்தில் தொழிலாளர்களின் நலனை உறுதி செய்வதற்கு போதுமான ஓய்வூதிய சேமிப்பு முக்கியம் !
எனவே, பணி ஓய்வுக்குப் பிறகும் தொடர்ச்சியான வருமானத்தை உறுதி செய்வதற்கான சிறந்த வழிமுறையை அரசாங்கம் ஆராயும் என பொருளாதார அமைச்சு தெரிவித்தது.
அதன் தொடர்பில், 13வது மலேசியா திட்டத்தில், ஊழியர் சேம நிதி வாரியம் EPF-ஐ இரண்டு பகுதிகளாகப் பிரிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
அதில், ஒரு பகுதியை பணி ஓய்வுக்குப் பிறகு, மாத சம்பளமாக வழங்க அவ்வமைச்சு திட்டம் கொண்டுள்ளது.
மேலும், நிலையான வருமானம் இல்லாத கிக் தொழிலாளர்களுக்கான சட்டம் மற்றும் சமூகப் பாதுகாப்பு அமைப்பு SOCSO சேவைகளும் மேம்படுத்தப்படும் என அது சொன்னது.
விபத்துக்களில் காயமடைந்த தொழிலாளர்கள் தேவையான சிகிச்சையைப் பெற்று வேலைக்குத் திரும்புவதற்கு ஏதுவாக SOCSO அமைப்பின் கீழ் வழங்கப்படும் மறுவாழ்வு சேவைகளும் விரிவுபடுத்தப்படும் என அவ்வமைச்சு விவரித்தது.
--------
நீதியை தங்கள் கைகளில் எடுத்துக் கொள்ள வேண்டாம் என பொதுமக்களை எச்சரித்துள்ளது Bukit Aman குற்றப் புலனாய்வுப் பிரிவு!
அத்தகையவர்கள் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அது சொன்னது.
முன்னதாக, KL மற்றும் மலாக்காவில் குற்றம் செய்த, சந்தேக நபர்கள், கோபமடைந்த பொதுமக்களால் அடித்துக் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் இரு வெவ்வேறு சம்பவங்களை அது சுட்டிக்காட்டியது.
-------
Pahang கில் மாரான், Rompin , பேராக்கில் Kampar,மற்றும் சரவாக்கின் Marudi ஆகிய பகுதிகளில், முதல் நிலை வெப்ப எச்சரிக்கை விடுக்கப்ப்ட்டுள்ளது.
அங்கு, குறைந்தது மூன்று நாட்களுக்கு தொடர்ச்சியாக வெப்பம் 35ல் இருந்து 37 பாகை செல்சியஸ் வரையில் பதிவாகியுள்ளது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather