← Back to list
ஒரு வீடு; ஒரு ஜாலூர் கெமிலாங் !
Jul 28, 2025

நாட்டின் ஒற்றுமை மற்றும் அதன் மீதான பற்றின் அடையாளமாக, ஒரே வீடு ஒரே Jalur Gemilang இயக்கத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் படி மலேசியர்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
வீடுகள் வாகனங்கள் மட்டுமின்றி, அலுவலகங்கள், பள்ளிகள் உள்ளிட்ட வளாகங்களிலும் தேசியக் கொடியை பறக்கவிடலாம் என தொடர்புத் துறை அமைச்சர் டத்தோ Fahmi Fadzil கூறியுள்ளார்...
தேசிய தினம் மற்றும் மலேசிய தினக் கொண்டாட்டங்களை முன்னிட்டு நாட்டுப் பற்றை வெளிக்காட்டும் நடவடிக்கையாக அது அமையும் என்றார் அவர்.
------
பினாங்கில், மருத்துவர் ஒருவர் மீது பதிவு செய்யப்பட்ட பாலியல் குற்றப் புகார்களை ஒட்டி, விசாரணை நடத்தி வருகிறது சுகாதர அமைச்சு !
தமது தரப்பு அந்த விஷயத்தை தீவிரமாகப் பார்ப்பதாகவும், விசாரணையை முடிக்க அவகாசம் அளிக்குமாறு KKM மக்களை வலியுறுத்தியுள்ளது.
கடந்த மாதம் தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவர் ஒருவர் , பாலியல் குற்றம் தொடர்பில் நான்காவது முறயாகக் கைது செய்யப்பட்டார்.
அவர் மீது ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், அவர் ஏன் இன்னும் மருத்துவராகப் பணியாற்ற அனுமதி வழங்கப்பட்டது என்றும் எழுந்த கேள்விக்கு அமைச்சு அவ்வாறு பதிலளித்தது.
------
பினாங்கு Balik Pulau மாரா அறிவியல் இளநிலை கல்லூரி Super Schools ரக்பி போட்டியில் வெற்றிப் பெற்றதை அடுத்து, இன்று அனைத்து MRSM கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவித்துள்ளார், MARA- தலைவர்.
-----
தீயணைப்பு தன்னார்வலர்கள் தொடர்பான அநாகரீக காணொலி ஒன்று பரவி வருவதை அடுத்து, தீயணைப்பு மீட்புத் துறை உள் கட்ட விசாரணயை தொடக்கியுள்ளது.
-----
பினாங்கில் 4வது பன்றிப் பண்ணை ஒன்றில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் பரவியதை அம்மாநிலம் உறுதிப்படுத்தியுள்ளது..
-----
தாய்லாந்து-கம்போடியா எல்லைப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர, இன்று புத்ராஜெயாவில் அவ்விரு நாடுகளின் தலைவர்களுடன் சந்திப்பு நடத்தவுள்ளார், ஆசியான் தலைவரான பிரதமர் Dato Seri Anwar Ibrahim.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather