← Back to list
"Buy-Now-Pay-Later" அபாயமானது!
Jul 22, 2025

முதலில் வாங்கி விட்டு பிறகு பணம் செலுத்தும், பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை இருபத்து இரண்டு விழுக்காட்டுக்கும் மேலாக அதிகரித்துள்ளது. 
Buy-now-pay-later திட்டத்தின் நடப்பில் பயன்பாட்டில் உள்ள கணக்குகள் எண்ணிக்கையும் 1.4 மில்லியனாக உயர்ந்துள்ளது. 
இத்திட்டத்தால் பயனர்கள் கடனில் சிக்கும் அபாயம் இருக்கிறது. 
குறிப்பாக நிதி நிர்வாகம் குறித்த கல்வியறிவு இல்லாதவர்களை அது அதிகம் பாதிக்கும் என நிதி அமைச்சு அச்சம் தெரிவித்துள்ளது. 
எனவே, வங்கி அல்லாத கடன் மற்றும் கடன் சேவை வழங்குநர்களை ஒழுங்குபடுத்துவதற்கான ஒரு புதிய சட்டத்தை மக்களவை அங்கீகரித்துள்ளது. 
அச்சட்டம் பயனர்கள் கடன் ஆணையம் என்ற ஒரு அமைப்பை உருவாக்கி, அதன் கீழ் கடன் கொள்கைகளை நிர்வகிக்க வகை செய்யும். 
அண்மைய காலமாக மலேசியர்களிடையே பிரபலமடைந்து வரும் buy-now-pay-later திட்டம் சில எதிர்மறை கருத்துகளைப் பெற்று வருகிறது. 
------- 
நாட்டின் கடன் அதிகரித்துள்ளதாக பரவி வரும் ஆரூடங்களை மறுத்துள்ளார், பிரதமர் DSAI. 
2022 ஆண்டோடு ஒப்பிடுகையில், மலேசியாவின் வருடாந்திர கடன் கடந்த ஆண்டு 22 பில்லியன் ரிங்கிட் குறைந்துள்ளதை பிரதமர் சுட்டிக் காட்டினார்.  
-----  
ஊழல் தொடர்பிலான தகவல்களை, ஊடகங்களில் வெளியிடாமல், அதிகாரப்பூர்வ தரப்பினரிடம் புகார் அளித்தால் மட்டுமே சட்டப் பாதுகாப்பு வழங்கப்படும். 
அதன் மூலம், அரசியல் ரகசியங்கள் பாதுகாக்கபடுவதோடு, கொடுக்கப்படும் தகவலின் உண்மைத் தன்மையும் உறுதிச் செய்யப்படும் என  சட்ட விவகாரங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் Datuk Seri Azalina Othman தெரிவித்தார்.  
----- 
இதனிடையே, சபாவில் Kota Marudu, பஹாங்கில் Bentong, கிளந்தானில் Machang  மற்றும் பேராக்கில்  Larut , Matang, Perak Tengah, Batang Padang ஆகிய பகுதிகளில் முதல் கட்ட வெப்ப எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது மலேசிய வானிலை ஆய்வுத் துறை. 
----- 
பேரா, சிலாங்கூர், நெகிரி செம்பிலான், மலாக்கா மாநிலங்களின் சில பகுதிகளில், காலை மணி 10 வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என METMALAYSIA கணித்துள்ளது. 
----- 
இந்தியாவின் Air India விமான நிறுவனம் கடந்த ஆறு மாதங்களில், பாதுகாப்பு விதிமீறல் தொடர்பீல் 9 எச்சரிக்கை அறிவிக்கைகளைப் பெற்றுள்ளது! 
கடந்த மாதம், அமெதாபாத்தில் அந்நிறுவனத்தின் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகி 260 பேர் உயிரிழந்தனர் 
             
            
              Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
              Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
              
                
                  
Weekdays
                
                
                7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
                
                  
Weekend
                
                8am, 9am, 10am, 11am, 12pm
               
              
              
              Weather