← Back to list
இருக்கை வார்ப்பட்டை சோதனையில் 1300 சம்மன்கள்!
Jul 21, 2025

அனைத்து உயர்கல்வி கூடங்கள் மற்றும், தங்கும் வசதியுடன் கூடிய பள்ளிகளின் பேருந்துளில், இருக்கை வார்ப்பட்டை பயன்பாட்டின் அமுலாக்கம் விரிவுப்படுத்தபடவுள்ளது.
அதன் தொடர்பில், கண்காணிப்பு நடவடிக்கைகளைத் தொடங்க நடமாடும் பணிக்குழு ஒன்று அடுத்த மாதம் பணியமர்த்தப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
சம்மந்தப்பட்ட் பேருந்துகள் அனைத்திலும் இருக்கை வார்ப்பட்டையின் பயன்பாடு கட்டாயமாக்கப்படவுள்ளதாக அத்துறைச் சொன்னது.
JPJவில் ஆள்பல பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதால், கண்காணிப்பு நடவடிக்கைகள் கட்டங்கட்டமாக நடைபெறும் என அது மேலும் கூறியது.
------
இதனிடையே, விரைவு பேருந்துகள், சுற்றுலா பேருந்துகள் மற்றும் வர்த்தக வாகனங்களில் இருக்கை வார்ப்பட்டை பயன்பாட்டை சோதனையிட்டுள்ளது JPJ !
அந்த சிறப்புச் சோதநை நடவடிக்கை மூலம், இம்மாதத்தில் மட்டும் இதுவரை நாடு முழுவதும் 1,300 சம்மன்களை அத்துறை வெளியிட்டுள்ளது.
அதில் பெரும்பாலானவை விரைவுப் பேருந்து பயணிகளை உட்படுத்தியவை.
முன்னதாக, 15 UPSI மாணவர்கள் பேருந்து விபத்தொன்றில் உயிரிழந்ததைப் அடுத்து, JPJ பேருந்துகள் மீது தொடர்ந்து கடுமையான கண்காணிப்பு மற்றும் அமுலாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
-------
இவ்வேளையில், எல்லா பொது போக்குவரத்து வாகனங்களிலும் dashcam கருவி கட்டாயமாக்கப்படலாம்!
நடப்பில் GPS கருவி மட்டுமே பொது வாகனங்களுக்குக் கட்டாயமாக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக் காட்டி, அப்புதிய பரிந்துரையை பரிசீலித்து வருவதாக JPJ சொன்னது.
முன்னதாக, RapidKL நிறுவனத்தின் பேருந்து ஒன்று, சைக்கிளோட்டிகள் குழு மீது மோதியது குறிப்பிடத்தக்கது.
------
தப்பியோடிய தொழிலதிபர் Jho Low சீனாவில் வசிக்கிறார் என கூறப்படுவது குறித்து எந்த புதிய தகவலும் இல்லை என்கிறார் பிரதமர் DSAI தெரிவித்துள்ளார்.
என்றாலும், உள்துறை அமைச்சு அவ்விஷயத்தை ஆராயும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
------
நெகிரி செம்பிலான், மலாக்கா மற்றும் சிலாங்கூர் உள்ளிட்ட ஏழு மாநிலங்களின் ஒன்பது பகுதிகளில் காற்றுத்தூய்மைக்கேட்டு குறியீடு ஆரோக்கியமற்ற அளவில் பதிவாகியுள்ளது!
56 பகுதிகளில் தற்போது மிதமான காற்றின் தர அளவீடுகள் உள்ளன.
------
வரும் சனிக்கிழமை கோலாலம்பூரில் நடைபெறவிருக்கும் பேரணியில் அரசு ஊழியர்கள் பங்கேற்க வேண்டாம் என அரசாங்க தலைமைச் செயலாளர் நினைவூட்டியுள்ளார்.
-------
ஜொகூரில், மெர்சிங், பொந்தியான், கூலாய், கோத்தா திங்கி மற்றும் ஜொகூர் பாருவில், காலை 11 மனி வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என மலேசிய வானிலை ஆய்வுத்துறை தெரிவித்துள்ளது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather