← Back to list
சிறுவர்களை பற்றிய ஊகங்களை நிறுத்துங்கள் !
Jul 18, 2025

 
Negeri Sembilan சிரம்பானில், அண்மையில் இரு இளம் சகோதரர்கள், கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டதாக சமூக ஊடகங்களில் பரவலாகும் தகவலகள் குறித்து, காவல்துறை விளக்கம் கொடுத்துள்ளது ! 
சாலையோரத்தில் கண்டெடுக்கப்பட்ட அக்குழந்தைகள், தங்களின் பெற்றோருக்குத் தெரியாமலேயே வீட்டை விட்டு வெளியேறியதாக, அத்துறை கூறியது. 
தாய் வேலை செய்து கொண்டிருந்தபோதும், தந்தை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோதும் அவர்கள் தனியாக வெளியே சென்றுவிட்டனர். 
அக்குழந்தைகள் சித்ரவதை செய்யப்பட்டதற்கான எந்தவொரு அறிகுறியும் தென்படவில்ல. 
அந்த குழந்தைகள், தங்கள் பெற்றொரரிடம் சென்று சேர்ந்துவிட்டதால், அது குறித்து ஊகங்களை கிளப்புவதை நிறுத்திக்கொள்ளும்படி, காவல்துறை பொதுமக்களைக் கேட்டுக்கொண்டது. 
--------- 
கடந்த மாதம் பேராக் கெரிக்கில் நிகழ்ந்த UPSI மாணவர்கள் ஏறிச் சென்ற பேருந்து விபத்து குறித்த இடைக்கால அறிக்கையை, போக்குவரத்து அமைச்சு வெளியிட்டுள்ளது !  
15 மாணவர்கள் பலியான அவ்விபத்துக்கு, வேகமே முதன்மைக் காரணம் என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
பல காரணங்களும், அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.  
மோசமான சாலை வடிவமைப்பு, பேருந்தின் உள்ளே பாதுகாப்பு அம்சங்கள் இல்லாதது உள்ளிட்டவையும் அதிலடங்கும்.  
--------- 
இதனிடையே, ஜொகூர் பாருவில் இன்று காலை பள்ளி வேன் ஒன்று கவிழ்ந்ததில், சில  மாணவர்கள் காயங்களுக்கு இலக்காகியுள்ளனர் !  
அப்பேருந்து, சாலையில் மூடப்படாமல் இருந்த குழியில் மோதி கவிழ்ந்ததாக நம்பப்படுகிறது.  
-------- 
மூன்று மாதங்களுக்கு முன்பு காணாமல் போன Datin Seri Pamela Ling தொடர்பான எந்தவொரு புதிய தகவல்களும் கிடைக்கவில்லை !  
ஆனால் விசாரணை இன்னும் நடைபெற்று வருவதாக, காவல்துறை கூறியது.  
---------- 
நாட்டின் புதிய தலைமை நீதிபதி நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மூத்த நீதிபதிகள் விவகாரம் குறித்த அவதூறுகளை, ஒரு முடிவுக்குக் கொண்டுவர, பிரதமர் Datuk Seri Anwar Ibrahim அழைப்பு விடுத்துள்ளார் ! 
தலைமை நீதி மற்றும் மற்ற நியமனங்களின் பதவியேற்பு சடங்கு, ஜூலை 28-ஆம் தேதி நடைபெறும். 
             
            
              Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
              Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
              
                
                  
Weekdays
                
                
                7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
                
                  
Weekend
                
                8am, 9am, 10am, 11am, 12pm
               
              
              
              Weather