← Back to list
KEJARA மதிப்பாய்வுகள் இறுதி கட்டத்தில் உள்ளன.
Jul 18, 2025

போக்குவரத்து குற்றங்களுக்கான தண்டனை புள்ளி முறை KEJARA-வின் புதிய மேம்பாடுகள் இறுதி கட்ட மதிப்பாய்வில் உள்ளன.
அது சில சட்ட அம்சங்கள் மற்றும் திருத்தங்களை உள்ளடக்கியதால், செயல்முறை முழுமை பொற அவகாசம் தேவைப்படுவதாக சாலை போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது..
அப்புதிய திட்டம், மோசமான விபத்துக்களை ஏற்படுத்துவது, பிற சாலைப் பயனளர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிப்பது என மொத்தம் 20 குற்றங்களை உள்ளடக்கியது.
KEJARA உயிரிழப்புகளை ஏறபடுத்தும் விபத்துகளை குறைப்பதையே முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது.
வாகனமோட்டிகள் ஒவ்வொரு குற்றங்களைப் புரியும்போதும், தீவிரத்தைப் பொருத்து அவர்களுக்குப் புள்ளிகள் வழங்கப்படும்.
மீண்டும் மீண்டும் போக்குவரத்துக் குற்றங்களை ஒருவர் புரிந்து, நிர்ணயிக்கப்பட்ட அளவை அப்புள்ளிகள் தாண்டும் போது, சம்பந்தப்பட்ட வாகனமோட்டியின் உரிமத்தை ரத்துச் செய்வதே KEJARA முறை.
--------
இன்று தொடங்கி Rapid KL On-Demand van சேவை சிலாங்கூரின் 12 புதிய இடங்களுக்கு வரிவுபடுத்தப்படுகிறது.
அச்சேவை தொடர்பான மேல் விவரங்களுக்கும் முன்பதிவுகளுக்கும் பொதுமக்கள் Rapid On-Demand செயலியைப் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.
---------
வெளிநாடுகளில் பயிலும் மலேசிய மாணவர்கள் தங்கள் கல்வியை முடித்த பிறகு நாடு திரும்பவும், நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்கவும் துணைப் பிரதமர் வலியுறுத்துகிறார்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அவர்களின் பங்களிப்பு அவசியம் என்றார் அவர்.
-----
கோலாலும்பூர் அனைத்துலக விமான நிலையம் KLIA முனையங்கள் 1 மற்றும் 2 இல் நில வடிவமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களைத் தொடங்க, மூன்று மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளது, வீடமைப்பு ஊராட்சித் துறை அமைச்சு.
அது 2026 Visit Malaysia திட்டத்தை முன்னிட்டு அனைத்துலக சுற்று பயணிகளுக்காக விமான நிலையத்தை மேம்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாகும்.
---
நாட்டின் புதிய தலைமை நீதிபதியாக, மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி Datuk Wan Ahmad Farid Wan Salleh நியமிக்கப்பட்டுள்ளார்.
---
அடுத்த ஆண்டு நாடாளுமன்றத்தின் முதல் அமர்வில், மிகவும் விரிவான மின் வர்த்தக சட்ட மசோதா தாக்கல் செய்யப்படும்.
உள்நாட்டு வர்த்தக வாழ்க்கைச் செலவீன அமைச்சு அதனைத் தெரிவித்துள்ளது.
---
நெகிரி செம்பிலான் , சிரம்பான் 2 Garden Avenue-வில், நேற்று சாலையோரத்தில் தனியாகக் காணப்பட்ட சகோதரர்கள் இருவர், அவர்கள் குடும்ப உறுப்பினர்களால் மீட்கப்பட்டிருப்பதைக் காவல்துறை உறுதிப்படுத்தியது.
---
அமெரிக்க அதிபர் Donald Trump, நாள்பட்ட நரம்பு குறைபாடால் பாதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்நிலை இயல்பானதே என்றும் ஆபத்தானதல்ல என்றும் அவரது அதிகாரிகள் கூறுகின்றனர்.
---
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather