← Back to list
என்னை தேடாதீர் !
Jul 16, 2025

மலேசியாவில் காணாமல் போனதாகக் கூறப்படும், British நாட்டு வாலிபன், தனது பெற்றோருக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ளதாக நம்பப்படுகிறது !
அந்த மின்னஞ்சலில், தன்னை தேட வேண்டாம், தாம் நலமாகத் தான் இருப்பதாக அந்த 17 வயது பையன் தெரிவித்திருப்பதாக சிலாங்கூர் காவல்துறை தலைவர் தெரிவித்துள்ளார்.
அவன் காணாமல் போன சம்பவம் தொடர்பில், அறுவரின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சொந்த ஊரில் இருந்து, மலேசியாவுக்கு வந்த அவன் கடைசியாக, KLIA-வில் இருந்து, KL Sentral-லுக்குச் செல்லும் பேருந்தில் காணப்பட்டான்.
-----------
மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய விசாரணைகளில் ஈடுபடும் நபர்களின் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில், பல மறுசீரமைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன !
சாட்சிகள் மற்றும் சந்தேக நபர்களிடம் வாக்குமூலம் பெறுவதற்காக, காணொலி பதிவு வசதியுடன் கூடிய, விசாரணை அறைகள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளதாக MACC தெரிவித்தது.
2009-ஆம் ஆண்டு, சிலாங்கூர் MACC வளாகத்தில் மர்மமான முறையில் Teoh Beng Hock உயிரிழந்து, அதற்கான காரணத்தை கண்டறிய முடியாமல் போனதை அடுத்து, அந்நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
Beng Hock-கின் குடும்பத்துக்கு, அவரது பிள்ளையின் வளர்ச்சி மற்றும் கல்வி தேவைகளுக்காக, உதவித்தொகை வழங்க தயாராக இருப்பதாகக் கூறிய MACC, அவரின் மரணத்துக்கு மன்னிப்புக் கேட்டுக்கொண்டது.
---------
சிலாங்கூர் சுபாங் ஜயாவில், வெளிநாட்டு ஆடவர் தனது முன்னாள் காதலியை கத்தியால் குத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணைக்கு உதவ, காவல்துறை 12 பேரிடமிருந்து வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளது !
அச்சம்பவத்துக்கான காரணத்தை அத்துறை கண்டறிந்து வருகிறது.
----------
ஜொகூர் பாருவில் கடந்த ஜனவரி மாதம், உணவகமொன்றில், ஆடவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், 65 வயது வெளிநாட்டு ஆடவர் கைதாகியுள்ளார்.
அச்சந்தேக நபர், இன்று முதல் 7 நாட்களுக்குத் தடுத்து வைத்து விசாரிக்கப்படுகிறார்.
---------
இவ்வாண்டு தொடங்கி ஏப்ரல் வரை, நாடு முழுவதும் 2,400-க்கும் மேற்பட்ட, குடும்ப வன்முறை சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன !
இல்லத்தரசிகளே, குடும்ப வன்முறையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக, மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather