← Back to list
உலகின் 12வது சிறந்த நகரமாக KL!
Jul 16, 2025

வீடுகளை வாடகைக்கு விடும்போது உரிமையாளர்கள் இன பாகுபாடு காட்டுவதை சட்டப்பூர்வமாகத் தடைச் செய்ய வேண்டும்!
YouGov ஆய்வில் கலந்து கொண்ட மலேசிய இளையோரில் அதிகமானோர் அவ்வாறு கருத்து தெரிவித்துள்ளனர்.
ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்ட கணக்கெடுப்பில், 18 வயது முதல் 24 வயதுடையவர்கள் அப்பரிந்துரைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
வீட்டு வாடகை சந்தையை நெறிப்படுத்த முறையான சட்டம் அவசியம் என, ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட அந்த ஆய்வில், 57 விழுக்காட்டினர் கூறியுள்ளனர்.
மூத்த தலைமுறையினரோ அதற்கு முரணான கருத்தை தெரிவித்திருக்கின்றனர்.
வீட்டை வாடகைக்கு விடும் உரிமையாளர்களுக்கு, தங்களுக்கு விருப்பமான இனத்தவர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமை கொடுக்கப்பட வேண்டும் என 59.7 விழுக்காட்டினர் கருதுகின்றனர்.
அவர்கள் அனைவரும் 35 முதல் 54 வயதுக்குட்பட்டவர்கள்.
--------
மாணவர்களுக்கான உலகின் சிறந்த நகரங்கள் பட்டியலில் Kuala Lumpur பன்னிரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது!
QS மாணவர்களுக்கான சிறந்த நகரங்களுக்கான பட்டியலில், அது மிகவும் உயர்ந்த தர வரிசையாகு,ம்.
முதல் 20 நகரங்களில் கோலாலும்பூர் இடம் பெற்றிருப்பது இதுவே, முதல் முறை.
தென்கிழக்கு ஆசியாவில், கோலாலும்பூர் சிங்கப்பூருக்கு அடுத்து இரண்டாவது நிலையில் உள்ளது.
உலகளவில், தென் கொரியாவின் தலைநகரான Seoul மாணவர்களுக்கான உலகின் சிறந்த நகரமாக உள்ளது.
-------
சிலாங்கூரில், நேற்று நடந்த அதிரடி சோதனையில், மூன்று சட்டவிரோத இணைய சூதாட்ட மையங்களை குடிநுழைவுத் துறை முடக்கியுள்ளது.
ஆவணங்கள் ஏதுமின்றி புலம்பெயர்ந்தவர்களைத் தங்க வைத்த சந்தேகித்தில், அச்சோதனையை நடத்தியதாக அத்துறை சொன்னது.
அடுக்குமாடி குடியிருப்பு, சூதாட்ட மையங்களாக மாற்றப்பட்டதோடு, பொதுமக்களின் பார்வையிலிருந்து மறைமுகமாக நடத்தப்பட்டு வந்துள்ளது.
-------
பினாங்கில், கடந்த மாதம் மூன்று வீடுகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் வட்டி முதலைகள் கும்பலைச் சேர்ந்த இருவரை காவல் துறை கைது செய்துள்ளது.
வீடொன்றில் சாயம் ஊற்றி சேதப்படுத்திய சம்பவத்திலும் அவ்விருவரும் சம்மந்தப்பட்டிருக்கலாம் என அத்துறை சந்தேகிறது.
----
ஜொகூர் Pagoh-வில் ஆற்றில் கார் கவிழ்ந்ததில், காணாமல் போன 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரை மீட்புப் படை தேடி வருகிறது.
---
நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான பத்மஸ்ரீ கமல்ஹாசன் இந்திய நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக வரும் ஜூலை 25 ஆம் தேதி பதவியேற்கவுள்ளார்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather