Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

Putra Heights தீ விபத்து; சதிநாச வேலை இல்லை !

Jun 30, 2025


putra heights தீ விபத்து; சதிநாச வேலை இல்லை !

 

சிலாங்கூர் Putra Heights எரிவாயு குழாய் தீ விபத்தில், சதிநாச வேலையோ அல்லது அலட்சியப் போக்கோ கண்டறியப்படவில்லை ! 

அவ்விபத்து நிகழ்ந்த பகுதி அருகிலுள்ள அனைத்து கட்டுமானப் பணிகளும், நிர்ணயிக்கப்பட்ட தர செயல்பாட்டு நடைமுறைகளை பின்பற்றியது, விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளதாக, மாநில காவல்துறை தலைவர் Datuk Hussein Omar Khan தெரிவித்துள்ளார். 

அந்த வெடிப்பு நடந்த சமயம் கூட, எந்த கட்டுமானப் பணிகளும் நடைபெறவில்லை என்றும் அவர் கூறினார். 

இவ்வேளையில், அச்சம்பவத்துக்கு, மண்ணில் ஏற்பட்ட தொடர்ச்சியான பாரத்தின் தாக்கம் உள்ளிட்ட காரணங்களை, வேலையிட பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை சுட்டிக்காட்டியுள்ளது. 

அவ்விபத்தில், 81 வீடுகள் முழுமையாக சேதமடைந்த வேளை, மேலும் 130 விடுகள் பல்வேறு சேதங்களை அடைந்தன. 

----------- 

சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு முக்கியம்; லாப நோக்கத்துக்காக அவர்களின் பாதுகாப்பை புறந்தள்ளி வைக்கக் கூட்டாது ! 

சுற்றுலா, கலை கலாச்சார அமைச்சர் அனைத்து சுற்றுலா நிறுவனங்களையும், அவ்வாறு கடுமையாக எச்சரித்துள்ளார். 

கடந்த சனிக்கிழமை, திரங்கானு Pulau Perhentian-னில், படகு ஒன்று கவிழ்ந்து, மூவர் உயிரிழந்ததை அடுத்து, அவர் அவ்வாறு கூறினார். 

அவ்விபத்தில், படகு நடத்துனர் காலாவதியான உரிமம் வைத்திருந்தது உட்பட, சில தவறுகளைப் புரிந்திருப்பதோடு, அப்படகு ஓட்டுநர் போதை மருந்து உட்கொண்டிருந்ததும் தெரிய வந்துள்ளது. 

எனவே, அந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைக்காக, படகோட்டி கைது செய்யப்பட்டு, 3 நாட்களுக்கு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார். 

----------- 

நாளை தொடங்கவிருக்கும் விரிவுப்படுத்தப்பட்ட விற்பனைச் சேவை வரி குறித்த விமர்சனங்களை, அரசாங்கம் திறந்த மனதுடன் ஏற்றுக் கொள்ளும் !   

ஆனால் அது தரவு அடிப்படையில் இருக்க வேண்டுமே தவிர, சமூக ஊடகங்களில் வெறுமனே பரப்பப்படும் அடிப்படையற்ற தகவல்களை வைத்து அல்ல என, பிரதமர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.  

அந்த SST, மிகவும் கவனமாக திட்டமிட்டு எடுக்கப்பட்டதொன்று; எனவே, அந்த SST-யால் பெரும்பான்மையான மக்கள் பாதிப்படைய மாட்டார்கள் என அவர் சொன்னார். 

------- 

மலேசியாவின் வேலையின்மை விகிதம் கடந்தாண்டில் 3.2 விழுக்காடாகக் குறைந்துள்ளதாக புள்ளிவிவரத் துறை தெரிவித்துள்ளது. 

இது கோவிட் 19 பிந்தைய காலத்தில் பதிவான, மிகக் குறைந்த அளவாகும். 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather

 
Ads With Us Ads With Us Ads With Us