← Back to list
இரு துப்பாக்கிச் சூடுகளுக்கும் தொடர்பில்லை !
Jun 25, 2025

KL Brickfields மற்றும் Cheras-சில் நிகழ்ந்த இரு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள், ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை அல்ல என நம்பப்படுகிறது !
தொடக்கக் கட்ட விசாரணையில் அது தெரியவந்துள்ளதாக, Cheras காவல்துறை தலைவர் தெரிவித்துள்ளார்.
Cheras-சில் அச்சம்பவத்தை நடத்தியவர்கள் இன்னும் கண்டறியப்படவில்லை என அவர் கூறினார்.
அவ்விரு இடங்களில் நிக்ழந்த அச்சம்பவங்கள் தொடர்பில், 38 பேரிடமிருந்து வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
Cheras-சில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் மாண்ட வேளை, Brickfields-சில் ஒருவர் பலியானார்.
----------
பேருந்துகளையும், லாரிகளையும் ஆபத்தான முறையில் ஓட்டுபவர்களைக் கண்டறிய, பொதுமக்களின் உதவி தேவை என போகுவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்தகைய வாகனங்கள் அபாயகரமாக செலுத்தப்படுவதைக் கண்டால், அதனை காணொலியாக எடுத்து, இனையத்தில் பதிவிடும்படி, அமைச்சர் Anthony Loke அனைவரையும் கேட்டுக்கொண்டுள்ளார்.
பொதுமக்களின் இது போன்ற செயல், அமலாக்க நடவடிக்கைகளுக்கு பெரிதும் உதவும் என அவர் கூறினார்.
அண்மையில், கனரக வாகனங்களை உட்படுத்திய சாலை விபத்துகள் அதிகம் நிகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
------------
Syed Saddiq Syed Abdul Rahman-னை அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவித்த, மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, ஊழல் ஒழிப்பு ஆணையம் மேல்முறையீடு செய்யும் !
முன்னதாக, ஊழல், பணச்சலவை உள்ளிட்ட அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்து, ஜொகூர் மூவார் நாடாளுமன்ற உறுப்பினரான அவரை, ஒருமனதாக விடுவிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
----------
சிலாங்கூர் கிள்ளானில் உள்ள தொழிற்சாலை ஒன்று தீப்பற்றி எரிந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அச்சம்பவத்தில், 20 பணியாளர்கள் காயமெதுவுமின்றி உயிர் தப்பினர்.
------------
பேராக் ஈப்போவில், வயிற்றில் கத்திக்குத்துக் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்ட 57 வயது நபரின் மரணம் தொடர்பில், அவரது மகன் விசாரணைக்காக கைது செய்யப்பட்டுள்ளார் !
----------
அனைத்துலக விண்வெளி நிலையத்திற்கு புறப்பட்டுள்ளார் இந்திய வீரர் Shubhanshu Shukla !
பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டுள்ளார்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather