← Back to list
கனிம சுரங்கத் திட்டத்தில், ஊழல்!
Jun 19, 2025

சபா கனிம சுரங்கத் திட்ட ஊழல் தொடர்பில் தகவல் கொடுத்த நபர், 2010 தகவல் தருபவர்கள் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படமாட்டார்!
அவரும் அக்குற்றத்தில் சம்பந்தப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளதை அடுத்து, அவர் மீதும் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டபடும் என்பதை மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையம் உறுதிப்படுத்தியது.
தகவல் தருபவர்கள் சட்டத்தின் கீழ் ஒருவரைப் பாதுகாக்க வேண்டுமென்றால், முதலில் அவர் அந்த குற்றத்தின் ஒரு பகுதியாக இருக்ககூடாது என்பது விதி என அது கூறியது.
இதனிடையே, அவ்விவகாரம் தொடர்பில் சபா மாநில சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்..
கனிம சுரங்க திட்டத்தில் இரண்டு லட்சம் ரிங்கிட் கையூட்டு வாங்கியது டத்தோ பட்டத்தைக் கொண்ட அவ்விருவர் மீது குற்றஞ்சாட்டப்படுகிறது.
-----
2024 இணைய பாதுகாப்புச் சட்டம் விரைவில் அமுலுக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது!
அதன் தொடர்பான சில முக்கிய செயல்முறைகள் இன்னும் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக, தொடர்புத்துறை அமைச்சர் Datuk Fahmi Fadzil தெரிவித்துள்ளார்.
அப்புதிய இணைய பாதுகாப்புச் சட்டத்தின் அமுலாக்கத்தைக் கண்காணிக்க, பிரதமர் துறையின் சட்ட விவகாரங்களான அமைச்சு, சிறப்பு செயற்குழு ஒன்றை அமைக்கும்.
------
அடுத்த மாதம் விரிவுப்படுத்தப்படவிருக்கும் விற்பனைச் சேவை வரி SSTயால், ஆறு மாதங்களில் கூடுதலாக ஐந்து பில்லியன் ரிங்கிட் வருவாயை ஈட்ட முடியும் என அரசாங்கம் எதிர்ப்பார்க்கிறது!
நாட்டின் நிதி மீள்தன்மையை வலுப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளில் ஒன்றாக அது அமைவதாக, நிதியமைச்சின் கருவூல பொதுச் செயலாளர் தெரிவித்தார்.
குறைந்த வருமானம் பெறுபவர்களின் சுமையைக் குறைத்து, நாட்டின் வருவாயை உயர்த்துவதே SSTயின் நோக்க எ்றார் அவர்.
------
இஸ்ரேல் ஈரான் இடையிலான பதட்டம் நீடித்து வரும் நிலையில், ஈரானில் உள்ள பதிவுப் பெற்ற மலேசியர்கள் பாதுகாப்பாக இருக்கின்றனர் என்பதை Wisma Putra உறுதிப்படுத்தியுள்ளது!
அங்குள்ள மலேசிய தூதரகத்தின் கீழ் நிலைமை கண்காணகப்பட்டு வருகிறது.
ஈரானில் உள்ள மலேசியர்கள் நாளை தாயகம் கொண்டு வரப்படுவர் என தொடர்புத்துறை அமைச்சர் முன்னதாகக் கூறினார்.
-----
இரு பேருந்து நிறுவனங்கள் மீது சாலை போக்குவரத்துத் துறை அமுலாக்க நடவடிக்கைகளை எடுத்துள்ளது!
அதன் ஓட்டுனர்கள் சாலையில் ஆபத்தான முறையில் பேருந்து ஓட்டும் காட்சிகள் அடங்கிய காணொலி ஒன்று அண்மையில் பரவிய நிலையில் , அதன் தொடர்பில் இரு புகார்களும் கிடைத்ததாக JPJ கூறியது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather