← Back to list
பாதுகாப்புச் சட்டம் விரைவில் அமலாக்கம் !
Jun 16, 2025

இணைய பாதுகாப்புச் சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் !
மாட்சிமை தங்கிய மாமன்னர் Sultan Ibrahim அச்சட்டதிற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
அச்சட்டம் அமலுக்கு வரும் தேதியை, தொடர்புத்துரை அமைச்சு முடிவுச் செய்யும் என, சட்ட, சீர்திருத்த அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்தச் சட்டம், சமூக ஊடக தளங்களில் பாதுகாப்பை உறுதி செய்யவும், 13 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு பாதுகாப்பு வழங்கவும் தேவையான கட்டுப்பாடுகளை வகுத்ததாகும்.
அது கடந்தாண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
-----------
2024-ஆண்டில் SPM தேர்வை முடித்த மாணவர்களில், 1 லட்சத்து ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு, பொது உயர்கல்விக் கூடங்களில் பயில வாய்ப்பு கிடைத்துள்ளது !
சமூக கல்லூரிகளும், தொழிற்பயிற்சி கல்லூரிகளும் அதிலடங்கும்.
அவர்கள், UPU Online வழி விண்னப்பித்தவர்களில், 67 விழுக்காட்டினர்களாவர்.
விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட மாணவர்கள், மேல்முறையீடு செய்ய இன்று முதல், 10 நாட்களுக்கு கால அவகாசம் வழங்கப்படுகிறது.
----------
இவ்வாண்டு மே வரை, 59 காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல்படையின் சாதாரண அதிகாரிகள் பணி நிக்கம் செய்யப்பட்டனர் !
போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் உட்பட, தவறான நடத்தைகளுக்காக, அவர்கள் மீது அந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக Bukit Aman தெரிவித்துள்ளது.
அதே சமயம், 492 காவல்துறையினர் ஒழுங்கு நடவடிக்கையை எதிர்கொண்டதாக, அது கூறியது.
---------
சிலாங்கூர் கிள்ளான் ஆற்றில் நடைபெற்று வரும் வெள்ளத் தடுப்பு பணிகளின் போது, ஒரு குழந்தையின் உடல் உட்பட, குறைந்தது 10 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன !
2022-ஆம் ஆண்டு நவம்பர் முதல், ஆற்றை ஆழப்படுத்துதல் மற்றும் விரிவுபடுத்தும் பணிகள் தொடங்கியதிலிருந்து, கிட்டத்தட்ட மாதந்தோறும் மனித உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-----------
நாடு முழுவதும் நேற்று மட்டும், 1,400-க்கும் மேற்பட்ட சாலை விபத்துகள் பதிவுச் செய்யப்பட்டன; அதில் 16 மரணங்கள் பதிவாகின.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather