← Back to list
PTPTN கடனுதவியும்; திருப்பிச் செலுத்தாதவர்களும்!
Jun 11, 2025

நான்கு லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள், PTPTN உயர்கல்வி கடனுதவியை அறவே திருப்பிச் செலுத்தவில்லை.
அவ்வாறு, உயர்கல்வி அமைச்சர் Datuk Seri Dr Zambry தெரிவித்துள்ளார்.
கல்வியை முடித்து 10 ஆண்டுகளுக்கு மேலாகியும், திருப்பிச் செலுத்தாமல் இருக்கும் கடன் தொகையின் மொத்த மதிப்பு 5 பில்லியன் ரிங்கிடடை எட்டியிருப்பதாக அவர் சொன்னார்.
இதனிடையே, கடன் வாங்கியவர்கள் இலகுவாகவும் சுமை இன்றியும் அப்பணத்தைத் திருப்பிச் செலுத்த ஏதுவாக, அவர்களுக்கு போதிய இடமளிக்க தமது தரப்பு எப்போதும் தயார் என PTPTN-னின் தலைமை செயல்முறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
-----
அரசு உயர்கல்வி கூடங்களில், இணைய வேகத்தை விரைவுப்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சி தீவிரமாகியுள்ளது!
நாடு முழுவதுமுள்ள அரசு பல்கலைக்கழக வளாகங்களில், 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட Wifi இணையச் சேவைக்கான அணுகல் புள்ளி பொருத்தப்பட்டிருப்பதாக உயர்கல்வி அமைச்சு கூறியது.
-----
பொதுமக்களின் அடையாள அட்டையை பெறுவதோ , வைத்திருப்பதோ, scan செய்யவதோ சட்டத்திற்கு புறம்பானது.
பதிவு செய்யும் நோக்கில் பாதுகாவலர்கள் MyCard அடையாள அட்டையைக் கேடபதும் தவறே என தேசிய பதிவு துறை சொன்னது.
முன்னதாக, பாதுகாவலர் ஒருவர் MyCard-யை scan செய்ய மின்னணு சாதனத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்பட்டது.
-----
பேராக், gerik-கில் UPSI மாணவர்களை உட்படுத்திய சம்பவம் தொடர்பாக பதினைந்து சாட்சியங்களிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
விசாரணை தொடருவதாக, Bukit Aman போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமுலாக்கத் துறை இயக்குநர் கூறினார்.
------
இதனிடையே, அவ்விபத்தில் சம்பந்தப்பட்ட பேருந்தில், பயணிகள் வார்ப்பட்டை பொருத்தப்படவில்லை என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
அப்பேருந்து 2013-ல் தயாரிக்கப்பட்ட நிலையில், புதிதாக தயாரிக்கப்பட்ட பேருந்துகளுக்கு வார்ப்பட்டை பொருத்துதல் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு கட்டாயமாக்கபட்டது குறிப்பிடத்தக்கது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather