← Back to list
கனரக வாகனங்களுக்கான பாதுகாப்பு SOP-கள் !
Jun 10, 2025

கனரக வாகனங்களுக்கான சில புதிய பாதுகாப்பு தர செயல்பாட்டு நடைமுறைகளை, போக்குவரத்து அமைச்சு பரிசீலித்து வருகிறது !
பேருந்துகளில், Dashcam கேமாராக்களைப் பொருத்துவது, இருக்கை வார்ப்பட்டை அணியாமல் இருக்கும் போது எழும் சத்த கருவியை நிறுவுவது ஆகியவை அதிலடங்கும்.
கனரக வாகன ஓட்டுநர்கள், வேகக் கட்டுப்பாட்டுக் கருவிகளை சேதப்படுத்துவது அல்லது முடக்காமல் இருப்பதை உறுதி செய்ய, கடுமையான அமலாக்கம் தேவை என அவ்வமைச்சு சொன்னது.
பேராக் கெரிக்கில், நேற்று நிகழ்ந்த கோர பேருந்து விபத்தில், 15 UPSI மாணவர்கள் கொல்லப்பட்டதத் தொடர்ந்து, அமைச்சு அவ்வாறு கூறியது.
-------
இதனிடையே, அச்சம்பவம் தொடர்பில் ஊகங்களைப் பரப்பி, விசாரணைக்கு பாதிப்பை ஏற்படுத்த வேண்டாம் என தேசிய காவல்படை துணை தலைவர், பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
சம்பந்தப்பட்ட பேருந்து, வேகமாக செல்வதைக் காட்டும் காட்சிகள் அடங்கிய காணொலிகள் பரவலாகப் பகிரப்பட்டு வருவதை அடுத்து, அவர் அவ்வாறு சொன்னார்.
-------
மற்றொரு நிலவரத்தில், அக்கொடூர விபத்தில் சிக்கி, மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைப் பெற்று வரும் 10 UPSI மாணவர்களுக்கு, மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சு, ஆயிரம் ரிங்கிட் உடனடி நிதியுதவியை அறிவித்துள்ளது.
-------
ஜொகூர் தங்காக்கில், தனது மனைவியை கழுத்தறுத்து கொலை செய்ததாகக் கூறப்படும் நபர் மீது, கொலை குற்றம் சாட்டப்பட்டுள்ளது !
அவரது மாமியார் குடும்பத்துக்குச் சொந்தமான பல வாகனங்களுக்கு தீ வைத்ததாகவும், அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
-------
பிரதமர் டத்தோஶ்ரீ அன்வாருக்கு எதிரான Yusoff Rawther வழக்கை, தற்காலிகமாக நிறுத்தி வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather