← Back to list
Op Lancar நடவடிக்கையில் PDRM !
Jun 06, 2025

ஹஜ் பெருநாள் விடுமுறையின் போது, போக்குவரத்து சுமூகமாக இருப்பதை உறுதிச் செய்யும் Op Lancar நடவடிக்கையில், அரச மலேசிய காவல்படை, கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது !
நாடு முழுவதும் அடிக்கடி நெரிசல் மற்றும் சாலை விபத்துகள் ஏற்படக்கூடிய இடங்களைக் கண்காணிக்க, 1,800-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டிருக்கின்றனர்.
அந்த சாலை சோதனை நடவடிக்கை, அடுத்த வார திங்கட்கிழமை வரை அமுலில் இருக்கும்.
மக்கள், தங்களின் பயணத்தை திட்டமிட்டு மேற்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
போக்குவரத்து நிலவரங்களைத் தெரிந்துகொள்ள, Astro Radio Traffic சமூக ஊடகங்களை வலம் வரலாம்.
---------
கடந்தாண்டு முதல் தற்போது வரை, மோட்டார்சைக்கிள்களுக்கான சோதனை நடவடிக்கையில், சாலைப் போக்குவரத்துத் துறை 1.13 மில்லியன் சம்மன் அறிவிக்கைகளை வெளியிட்டுள்ளது !
பல்வேறு குற்றங்களுக்காக அவை வெளியிடப்பட்டதாக, அத்துறை கூறியது.
---------
இதனிடையே, நாடு முழுவதும் நேற்று மட்டும், 1,700-க்கும் மேற்பட்ட சாலை விபத்துகள் பதிவு செய்யப்பட்டன; அதில் 22 மரணங்கள் பதிவாகின.
-----------
சிலாங்கூர் Pusat Bandar Puchong LRT நிலைய தண்டவாளத்தில், தைவானிய ஆடவர் ஒருவர் விழுந்து உயிரிழந்த சம்பவத்தில், எந்த குற்ற அம்சங்களும் கண்டறியப்படவில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது !
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather