← Back to list
ரயில் நிலையங்கள் அருகே வீடுகள்!
Jun 05, 2025

போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கான முயற்சிகளை அரசாங்கம் தீவிரப்படுத்துகிறது!
ரயில் நிலையங்களுக்கு மேல் வீடு கட்டுவதற்கான திட்டங்களையும், அது ஆராய்ந்து வருகிறது.
LRT, MRT ரயில் நிலையங்களுக்கு அருகே, மலிவு விலையில் வீடுகளை அமைப்பது குறித்து, அரசாங்கம் பரிசீலித்து வருவதாக போக்குவரத்து அமைச்சு சொன்னது.
அத்திட்டம் பொதுமக்கள் கார்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும், வீடுகளை மிகவும் மலிவு விலையில் வாங்கவும் உதவும் என அவ்வமைச்சு மேலும் விளக்கியது.
----
தடைசெய்யப்பட்ட பொருட்களைக் கொண்ட Vape அல்லது மின்னியல் சிகரெட்களால் ஏற்படும், நச்சு பாதிப்பு சம்பவங்களின் எண்ணிக்கையில் உயர்வு ஏற்பட்டுள்ளதாக தேசிய நச்சு மையம் தெரிவித்துள்ளது.
----
இதனிடையே, பேராக்கில், Vape அல்லது மின்னியல் சிகரெட் விற்பனையைத் தடை செய்வதற்கான சாத்தியக்கூறுகளை, அம்மாநில அரசு மதிப்பாய்வு செய்து வருகிறது.
----
பாலர் பள்ளி முதல் உயர்நிலைப் பள்ளி வரையிலான கொள்கைகளை, நெறிப்படுத்துதல் மற்றும் ஒருங்கிணைப்பதில் கவனம் செலுத்த ஏதுவாக, புதிய தேசிய கல்வி ஆலோசனை மன்றம் ஒன்று அமைக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
----
2025/26 கல்வித் தவணைக்காக Politeknik இளங்கலை பட்டப்படிப்பு மாணவர் விண்ணப்பம் தொடங்கியுள்ளது!
ஜூலை 4 வரை மாணவர்கள் அதற்கு விண்ணப்பிக்கலாம்.
----
இன்று தொடங்கி ஒரு வாரத்திற்கு, தீபகற்பத்தில் RON97 மற்றும் டீசல் விலை லிட்டருக்கு மூன்று சென் குறைகின்றது
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather