← Back to list
உடல் பருமன் சாதாரணமானதல்ல !
Jun 05, 2025

மலேசியாவில் உடல் பருமன் நிலைமை கவலைக்குரிய விகிதத்தில் உள்ளது!
அதன் எண்ணிக்கையில் உயர்வு காணப்படுவது, நாட்டின் சுகாதார அமைப்பிற்கு அழுத்தத்தைத் தான் ஏற்படுத்துகிறது, என மலேசிய உடல் பருமன் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் Dr Rohana Abdul Ghani, கூறினார்.
உடல் பருமனை குறைத்து மதிப்பிடவோ சாதாரணமாக எடுத்து கொள்ளவோ முடியாது.
தற்போது, அதன் மொத்த எண்ணிக்கை 21.8 விழுக்காட்டை எட்டியுள்ளது;
அதாவது, ஐந்தில் ஒருவர் உடல் பருமனால் அவதியுறுகின்றனர் என்பதை காட்டுவதாகவும் அவர் சொன்னார்.
அது, நாட்டின் மக்கள்தொகையில் பாதி என வருத்தம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
உடல் பருமன், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் போன்ற பல்வேறு நோய்களின் அபாயத்தையும் அதிகரிக்கிறது என அவர் எச்சரித்தார்
-----
சிலாங்கூர் பூச்சோங் LRT ரயில் தண்டவாளத்தில் Taiwan-ஐ சேர்ந்த நபர் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்ததன் தொடர்பில், CCTV கண்காணிப்புக் கேமராவை சோதனையிட்டதில் அது விபத்துதான் என தெரிய வந்துள்ளது.
அந்நபர் நடந்துச் செல்வதற்கு முன்பு சரியாக கவனிக்காமல் விழுந்தத காட்சிகள் அதில் உள்ளன.
-----
வாடிக்கையாளர் கணக்குத் தரவுகளைத் தவறாகப் பயன்படுத்தியதாக ஆஸ்ட்ரோவின் முன்னாள் ஊழியர் ஒருவர் மீது 743 குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன.
பயனர்களுக்கு உள்ளடக்கத்தை இலவசமாக அணுகுவதற்காக வழக்கமான கணக்குகளை சட்டவிரோதமான முறையில் நிறுவன கணக்குகளாக மாற்றியமைத்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அந்த குற்றம் உறுதி செய்யப்பட்டால், அவருக்கு ஏழு ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
----
பினாங்கில், போலி இணைய முதலீட்டு மோசடியில் சிக்கிய நிறுவன உரிமையாளர் 1.3 மில்லியன் ரிங்கிட்டை இழந்துள்ளார்.
----
இன்று தொடங்கி ஒரு வாரத்திற்கு, தீபகற்பத்தில் RON97 மற்றும் டீசல் விலை லிட்டருக்கு மூன்று சென்கள் குறைகின்றது
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather