← Back to list
நெடுஞ்சாலையில் 2 மில்லியன் வாகனங்கள் !
May 30, 2025

ஹஜ் பெருநாளை முன்னிட்டு, சொந்த ஊருக்கு திரும்புவோர், தங்களின் பயணத்தை திட்டமிட்டு மேற்கொள்ளுங்கள் !
ஜூன் 5, 6, 8, 9-ஆம் தேதிகளில், ஒரு நாளைக்கு 20 லட்சத்துக்கும் அதிகமான வாகனங்கள், PLUS நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் எதிர்பார்க்கப்படுவதே அதற்குக் காரணம்.
அக்காலகட்டத்தில், 30 முக்கிய பகுதிகளில், Smart Lane பாதைகள் திறந்துவிடப்படும்.
போக்குவரத்து நிலவரங்களைத் தெரிந்துகொள்ள, Astro Radio Traffic சமூக ஊடகங்களை வலம் வரலாம்.
-----------
பேராக் தெலுக் இந்தானில், FRU Truck விபத்துக்கு காரணமான ல லாரி நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக, நிலப் பொதுப் போக்குவரத்து நிறுவனம் தெரிவித்துள்ளது.
அது, தர செயல்பாட்டு நடைமுறைகளைப் பின்பற்றாதது உள்ளிட்ட, பல பாதுகாப்பு விதிமுறைகளை மீறியிருப்பது, தெரிய வந்துள்ளதை அடுத்து, அந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட லோரி, FRU Truck-கை மோதி விபத்துக்குள்ளாக்கியதில், அதிலிருந்த FRU கலகத் தடுப்பு வீரர்களில் 9 பேர் மரணமடைந்தனர்.
------------
தற்போது நாட்டில் நிலவி வரும் வெப்ப நிலை, தென்மேற்கு பருவமழை காலத்தில் ஒவ்வோராண்டும் வழக்கமாக ஏற்படும் ஒன்று தான் !
பயப்படக்கூடிய அளவுக்கு, கடுமையான வெப்பம் அல்ல என மலேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
------------
சரவாக் மாதாங்கில், மகளை பாலியல் வல்லுறவுக்கு தனது நண்பரிடம் அனுப்பிய தந்தைக்கு, கூச்சிங் Sessions நீதிமன்றம், 4 பிரம்படிகளுடன் கூடிய, 12 ஆண்டுகள் சிறைத்தண்டனையை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
48 வயதான அந்த நபருக்கு, மறுவாழ்வு ஆலோசனை வழங்கவும், விடுதலையான பிறகு இரண்டு ஆண்டுகள் காவல்துறை கண்காணிப்பில் வைக்கப்படவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
----------
கிளந்தானில் 16 விழுக்காட்டினருக்கு, நீரிழிவு நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில், அது, தேசிய சராசரி விகிதத்தை விட அதிகமாகும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather