← Back to list
கோலாலும்பூர் கோபுரம் தற்காலிக அடைப்பு !
Apr 17, 2025

சீன அதிபரின் அதிகாரப்பூர்வ பயணத்தின் பலனாக மொத்தம் முப்பத்து ஓரு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் மலேசியா அந்நாட்டுடன் கையெழுத்திட்டு இருக்கின்றது.
அவை, பாதுகாப்பு, வர்த்தகம், விவசாயம், கல்வி ஆகிய பிரிவுகளை உட்படுத்திய ஒப்பந்தங்களாகும்.
அமெரிக்காவுடனான வர்த்தக முதலீட்டு உறவுகளை உறுதி செய்யும் அதே வேளை, தனது கொள்கைகளை நிலைநாட்டுவதில் மற்ற தரப்புகளை பாதிக்காமல் இருப்பதை மலேசியா கருத்தில் கொள்ளும் என பிரதமர் தெரிவித்தார்.
----
சரிபார்ப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக கோலாலம்பூர் கோபுரம் தற்காலிகமாக மூடப்படுகிறது!
அது மீண்டும் திறக்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 1ஆம் தேதி முதல் புதிய நிர்வாகத்தின் கீழ் செயல்படத் தொடங்கினாலும், KL கோபுரம் இன்னும் அரசாங்கத்திற்குச் சொந்தமானதே என்பதை தொடர்புத்துறை அமைச்சு உறுதிப்படுத்தியது.
-----
முழுமை பெறாத Jalur Gemilang கொடியை அச்சிட்டதாக இரண்டு உள்ளூர் பத்திரிக்கை நிறுவனங்கள் மீது காவல் துறை விசாரணையைத் தொடக்கியுள்ளது!
அவ்வாறான பொறுப்பற்ற செயலை கண்டித்ததோடு, அதற்குக் காரணமான நபர் மீது கட்டொழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மாமன்னர் தனது முகநூலில் பதிவிட்டிருந்தார்
-----
கோலாலும்பூர், Ampang-Sri Petaling LRT ரயில் பெட்டிகளில் அசெளகரியமான விளம்பர படங்களை காட்சிப்படுத்தியதற்காக, சம்பந்தப்பட்ட நிறுவனம் மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
அவ்விளம்பரம்,தகாத முறையில் சித்தரிக்கப்ப்ட்டிருந்தது சமூக வலைத்தளவாசிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது
------
கோலாலும்பூர் அனைத்துலக விமான நிலையம் அருகே நடந்த கார் மின்கலன் வெடிப்பு சம்பவம் தொழில்நுட்பக் கோளாறால் ஏற்பட்டதாக KLIA காவல் துறை உறுதிப்படுத்தியுள்ளது.
----
பேரா, ஈப்போவில் நகராண்மை கழக அமலாக்க அதிகாரிகளுக்கும், உணவக ஊழியர்களுக்கும் இடைய நடந்த கைகலப்பு குறித்து காவல் துறை விசாரித்து வருகிறது.
----
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather