← Back to list
Ismail Sabri சந்தேக நபர் !
Mar 03, 2025

MACC விசாரித்து வரும் ஊழல், பண மோசடி வழக்கில் முன்னாள் பிரதமர் Ismail Sabri Yaakob தற்போது சந்தேக நபராகக் கருதப்படுகிறார் !
அவர் இனி சாட்சியாக இல்லை என MACC தலைமை ஆணையர் டான் ஶ்ரீ Azam Baki தெரிவித்துள்ளார்.
எனவே, இவ்வாரத்தில் மற்றொரு சுற்று விசாரணைக்கு, MACC அவரை அழைக்கும் என அவர் கூறினார்.
ஆயினும், Ismail Sabri அண்மையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரது உடல்நிலையைப் பொறுத்தே, அந்த மற்றொரு சுற்று விசாரணை அமையும்.
ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக, அவரது உதவியாளர்கள் நால்வர் அண்மையில் கைதாகியதை அடுத்து, அவ்விசாரணை நடைபெறுகிறது.
--------
சந்தையில் உள்நாட்டு வெள்ளை அரிசி விநியோகத்தைச் சீர்படுத்தும் முயற்சிகளை விரைவுபடுத்தும்படி, விவசாய, உணவுப் பாதுகாப்பு அமைச்சு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அதன் விநியோகத்தைச் சீர்படுத்துவது தொடர்பான மேம்பாடுகள் குறித்துப் பொதுமக்களுக்குத் தொடர்ந்து தெரிவிக்குமாறு, அமைச்சுக்குப் பிரதமர் உத்தரவிட்டுள்ளதாக, பிரதமரின் மூத்த பத்திரிகைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
அரிசி கொள்முதல் விலை அமைப்பு முறை, அரிசி உற்பத்தி செலவுகள், உள்ளூர் அரிசி உச்சவரம்பு விலை ஆகியவற்றிலுள்ள சிக்கல்கள் காரணமாக, அந்த அரிசி விநியோகத்தில் பற்றாக்குறை ஏற்பட்டதாக, அவ்வமைச்சை மேற்கோள் காட்டி ஊடகங்கள் முன்னதாக செய்தி வெளியிட்டிருந்தன.
--------
சிங்கப்பூரை இணைக்கும் ஜொகூர் பாலத்தின் கார் பயனர்களுக்கு, QR குறியீடுகளின் பயன்பாட்டை விரிவுபடுத்த அரசு திட்டமிட்டுள்ளது !
மோட்டார் சைக்கிள்கள், பேருந்துகளுக்கான அம்முறையின் பயன்பாடு வெற்றிகரமாக இருப்பதாகவும், அடுத்ததாக கார் பாதைகளுக்கு சோதிக்கப்படும் என்றும் துணைப் பிரதமர் தெரிவித்தார்.
---------
கெடா லங்காவியில், அண்மையில் நான்கு வயது சிறுவனை கடித்த நாய்கள், தெருவில் சுற்றித் திரிவதா அல்லது ஆட்களால் வளர்க்கபடுவதா என்பதை கண்டறிய, அந்த நகராண்மை மன்றம் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
அச்சம்பவத்தில், அச்சிறுவனின் தலை மற்றும் உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டதாக, முன்னதாக தகவல்கள் வெளியாகின.
--------
மற்றொரு பக்கம், அலோ செத்தாரில், தனது தாயைக் கொன்று தீயிட்டு எரித்த சந்தேகத்தின் பேரில் நபர் ஒருவரைக் காவல் துறை தடுத்து வைத்துள்ளது!
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather