← Back to list
தப்பிச் செல்ல முயன்றாரா ?
Feb 18, 2025

அண்மையில் சிலாங்கூர், Setia Alam பேரங்காடி ஒன்றில் துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர், தாய்லாந்துக்கு படகு வாயிலாக தப்பிச் செல்ல திட்டமிட்டிருந்தது தெரிய வந்துள்ளது.
அந்நாட்டில் இருக்கும் தனது மனைவி பிள்ளை மீது ஏக்கமாக இருப்பதால், அவர்களைக் காண தாம் அங்குச் செல்ல வேண்டும் என அச்சந்தேக நபர், ஒருவரிடம் கூறியதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் இன்று சுட்டுக் கொல்லப்படுவதற்கு முன்பே, பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டதாக, மாநில காவல்துறை தலைவர் Datuk Hussein Omar Khan தெரிவித்துள்ளார்.
அச்சந்தேக பேர்வழி, தங்க நகைக்கடையில் கொள்ளையடிக்க திட்டமிட்டிருந்ததாகவும் அவர் கூறினார்.
அந்நபருக்கு, துப்பாக்கி எவ்வாறு கிடைத்தது உள்ளிட்ட விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
--------
இன பாகுபாடு எதிர்ப்புச் சட்டம் மாதிரியான, புதிய கொள்கைகளை வகுக்க வேண்டிய அவசியம் இல்லை என ஒற்றுமை துறை அமைச்சர் Datuk Aaron Ago Dagang தெரிவித்துள்ளார்.
பல்லின மக்களின் நல்லுறவைப் பாதுகாக்க ஏதுவான நடப்புச் சட்டங்களின் அமுலாகத்தை வலுப்படுத்தினாலே போதும் என அவர் கருதுகிறார்.
-------
DBKL, 17 மாடிகள் கொண்ட உயர்நிலைப் பள்ளிகளைக் கட்டுவதற்கான திட்டங்களை வகுத்து வருகிறது.
கோலாலம்பூரில், புதிய பள்ளிகளுக்குக் கிடைக்கும் குறைந்த இடத்தைப் பயன்படுத்திக் கொள்ள, அது ஒரு வழியென கூட்டரசு பிரதேச அமைச்சு தெரிவித்துள்ளது.
---------
கெடா சுங்கை பட்டானியில், மன நோய்வாய்ப்பட்ட நபரால் தாக்கப்பட்ட நான்கு காவல் வீரர்களில் இருவர், தற்போது மருத்துவமனையில் நல்ல நிலையில் இருக்கின்றனர்.
அங்கு, முரட்டுத்தனமாக ஓடிய அந்நபரை, கைது செய்ய முயன்றபோது, அந்த வீரர்கள் பாராங்கால் தாக்கப்பட்டனர்.
--------
Johor செகாமாட்டில், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை, பாரம்பரிய மருத்துவ பயிற்சியாளர் ஒருவர் மறுத்தார்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather