← Back to list
T.நவின் கொலை வழக்கு !
Jan 13, 2025
தி.நவீன் கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட நால்வர், தற்காப்பு வாதம் புரிய வேண்டுமென மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, அந்நால்வரையும் விடுவித்த உயர்நீதிமன்றத்தின் முடிவை, இன்று மேல்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
அதையடுத்து, அவ்வழக்கு மீண்டும் பினாங்கு உயர் நீதிமன்றத்துக்கு திரும்புகிறது.
அங்கு அவர்கள் தற்காப்பு வாதம் புரிய வேண்டும்.
விசாரணை முடியும் வரை, அந்நல்வரையும் தடுப்புக் காவலில் வைக்குமாறும், நீதிபதிகள் குழுவொன்று உத்தரவிட்டுள்ளது.
2017-ஆம் ஆண்டு பினாங்கில், நவீன் கொடூரமான பகடிவதைக்கு ஆளாகி பரிதாபமாக உயிரிழந்தார்.
----------
150 ரிங்கிட் ஆரம்ப பள்ளிக்கூட உதவி, மாணவர்கள் எதிர்வரும் புதிய பள்ளித் தவணைக்கு தயாராக உதவுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
அனைத்துப் பணமும் பெற்றோருக்கு வழங்கப்படுவதைப் பள்ளிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும், அப்பணத்திலிருந்து எந்த கழிப்பையும் செய்யக்கூடாது என்றும், கல்வியமைச்சர் Fadhlina Sidek தெரிவித்துள்ளார்.
அப்பணத்தை, தங்கள் குழந்தைகளுக்கு தேவையான பள்ளி பொருட்களை வாங்க மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் பெற்றோர்களுக்கு நினைவூட்டியுள்ளார்.
-----------
ஜொகூரில் வெள்ளத்தால் மூவாயிரத்து 200-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அங்கு இன்று முழுவதும் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என, மலேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
--------
இதனிடையே, அங்கு அப்பேரிடரால் 38 SPM மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 21 பேர் வெள்ள நிவாரண மையங்களில், தேர்வுக்கு அமர்ந்துள்ளதாக மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-------
மலாயாப் பல்கலைகழகத்தில் செயல்பட்டு வரும், 24 மணி நேர பல்பொருள் விற்பனைக் கடையில், Ham and Cheese Sandwich-களுக்கு Halal சான்றிதழ் இல்லையென்பதை, ஜாகிம் உறுதிப்படுத்தியுள்ளது.
அந்த ரொட்டி தயாரிப்பாளருக்கு எதிராக, உள்நாட்டு வாணிக, வாழ்க்கைச் செலவீன அமைச்சு சட்ட நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather