← Back to list
தெக்குனில் கூடுதல் நிதி !
Dec 27, 2024

இந்திய சமுதாயத்திற்கு தெக்குனில் கூடுதல் நிதியை பெறுவதற்கான முயற்சியில், தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சர் டத்தோஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் ஈடுப்பட்டுள்ளார்.
அவரின் முதன்மை செயலாளர் டத்தோ அன்புமணி பாலன் அதனை தெரிவித்துள்ளார்.
இவ்வாண்டு தெக்குன் வாயிலாக 30 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டது.
ஆனால் டத்தோஶ்ரீ ரமணின் முயற்சியால் 𝐒𝐏𝐔𝐌𝐈 𝐆𝐨𝐞𝐬 𝐁𝐢𝐠 திட்டத்தின் வாயிலாக மேலும் 30 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டது.
மொத்தமாக ஒதுக்கப்பட்ட 60 மில்லியன் ரிங்கிட்டும் தற்போது முடிவும் தருவாயிலில் உள்ளது எனக் கூறிய அவர், அதன் வாயிலாக இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய வணிகர்கள் பயடைந்துள்ளதாக சொன்னார்.
இந்நிலையில் அடுத்தாண்டுக்கான பட்ஜெட்டில் பிரதமர், தெக்குனில் இந்திய சமுதாயத்திற்கு ஒதுக்கிய 30 மில்லியன் ரிங்கிட் நிதியை மேலும் உயர்த்த வேண்டும் எனும் அடிப்படையில், ரமணன் தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.
-----------
சமூக ஊடக வழங்குநர்கள், தங்கள் மலேசிய உரிமங்களுக்கு விண்ணப்பிக்க, அடுத்த வாரம் செவ்வாய்கிழமை வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது !
அதனை தொடர்புத்துறை அமைச்சு நினைவூட்டியுள்ளது.
நேற்று, Telegram மற்றும் WeChat, தங்களின் விண்ணப்பங்களைத் தாக்கல் செய்ததாக, தொடர்பு பல்லூடக ஆணையம் தெரிவித்தது.
----------
நோர்வேயில் ஏற்பட்டுள்ள மூவர் பலியாகிய, நெஞ்சை உலுக்கும் பேருந்து விபத்தில் மலேசியர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு தூதரக உதவிகளை வழங்க, விஸ்மா புத்ரா குழுவொன்றை அங்கு அனுப்பியுள்ளது.
-----------
இதனிடையே, நாட்டில் நேற்று மட்டும் 1,500-க்கும் அதிகமான சாலை விபத்துகள் பதிவு செய்யப்பட்ட வேளை, 20 மரணங்கள் பதிவானதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
----------
பினாங்கு GEORGE TOWN-னில் உள்ள சாலை ஒன்றில், கிறிஸ்துமஸ் தினத்தன்று ஏற்பட்ட பகடிவதை தொடர்பில், தொழிற்சாலை ஊழியரான ஆடவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான்.
----------
இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், உடல்நலக் குறைவால் தனது 92-ஆவது வயதில் காலமானதை அடுத்து, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இரங்கல் தெரிவித்துள்ளார்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather