← Back to list
கோர விபத்து !
Dec 24, 2024

மலாக்காவில் வடக்கு-தெற்கு விரைவுச்சாலையில் நேற்றிரவு நடந்த விபத்து குறித்து, முழுமையான விசாரணையை நடத்தும்படி, சாலை போக்குவரத்துத் துறை கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
வர்த்தக வாகனங்கள், பாதுகாப்புத் தரங்களுக்கு இணங்குவதை உறுதி செய்ய, அதிகாரிகள் தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகளை அமுல்படுத்துவர் என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
அதில் சம்பந்தப்பட்ட பேருந்து, சாலையில் இருந்த லோரி ஒன்றின் டயரில் மோதியதால் ஏற்பட்டிருக்கின்றது!
அக்கோர விபத்து, அதில் சம்பந்தப்பட்ட பேருந்து, சாலையில் இருந்த லோரி ஒன்றின் டயரில் மோதியதால் ஏற்பட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது.
அப்பேருந்து, trailer லாரி, MPV வாகனம், மற்றும் கார் ஒன்றையும் மோதியதாகக் காவல் துறை, ஓர் அறிக்கை வழி தெரிவித்தது.
அவ்விபத்தில், பேருந்து ஓட்டுனர் மற்றும் பயணி உட்பட எழுவர் பலியாகிய வேளை, 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
-------
இதனிடையே, நேற்று நாடு முழுவதும் 1,800-க்கும் மேற்பட்ட சாலை விபத்துகள் பதிவு செய்யப்பட்டன.
அதில் 23 மரணங்கள் பதிவானதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
---------
கிறிஸ்துமஸ் மற்றும் ஆண்டிறுதி விடுமுறையை முன்னிட்டு வழங்கப்பட்டுள்ள, இலவச டோல் கட்டணம் இன்றோடு முடிவடையவிருக்கும் நிலையில், போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம் என நெடுஞ்சாலை வாரியம் தெரிவித்துள்ளது.
எனவே, போக்குவரத்து நிலவரங்ளைத் தெரிந்துகொள்ள, Astro Radio Traffic, சமூக ஊடக வலைத்தளங்களை வலம் வரலாம்.
---------
இவ்வேளையில், நாளை பெர்லிஸ், பேராக், மலாக்கா, Putrajaya-வில் வானிலை சீராக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதர மாநிலங்கள் அனைத்திலும், காலை, மாலை அல்லது இரவில் மழை பெய்யக்கூடும் என, மலேசிய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
----------
மற்றொரு நிலவரத்தில், இன்றிரவு 8 மணி வரை, கோலாலம்பூர்ர், சிலாங்கூர்ர், பேராக் உட்பட சில மாநிலங்களின் பெரும்பாலான பகுதிகளில், இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என அம்மையம் எச்சரித்துள்ளது.
----------
இந்தியாவில் தஞ்சமடைந்து வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமர் Sheikh Hasina-வை நாடு கடத்துபடி, அந்நாட்டுக்குக் கடிதம் அனுப்பியுள்ளது வங்காளதேசம்!
வங்காளதேசத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் அரசுக்கு எதிரான மாணவர் போராடம் தீவிரமடைந்த நிலையில், Awami லீக் கட்சித் தலைவரான Hasina, பிரதமர் பதவியிலிருந்து விலகி இந்தியாவுக்குத் தப்பி ஓடினார்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather