← Back to list
மருத்துவ காப்பீடு விவகாரம் !
Dec 21, 2024

மருத்துவ மற்றும் சுகாதார காப்பீடு, தக்காஃபுல் தயாரிப்பு பிரீமியம் சரிசெய்தலின் தாக்கத்தை சமாளிக்க, இடைக்கால நடவடிக்கைகளை செயல்படுத்துவதை அரசாங்கம் தொடர்ந்து கண்காணிக்கும்.
மருத்துவ செலவு பணவீக்கத்தை முழுமையாக சமாளிக்க, நீண்ட கால சீர்திருத்தங்களும் துரிதப்படுத்தப்படும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
காப்பீட்டுத் தொகை நீடித்து நிலைக்கக்கூடியதாகவும், policy-தாரர்களுக்குக் கட்டுப்படியாகக்கூடியதாகவும் இருப்பதை உறுதி செய்வதே, அந்நடவடிக்கையின் நோக்கம் என அவ்வமைச்சு கூறியது.
------------
மற்றொரு பக்கம், காப்பீட்டு பிரீமியம் அதிகரிப்பு மற்றும் மருத்துவ takaful மீதான கட்டுப்பாட்டை அதிகரிப்பதற்கான இடைக்கால நடவடிக்கையை, சுகாதார அமைச்சு வரவேற்றுள்ளது.
மக்கள் திடீர் பணவீக்கத்தால் சுமையாக இருக்கக்கூடாது என்பதற்காக, பங்குதாரர்களுடன் இணைந்து அவ்வமைச்சு தற்போதுள்ள முயற்சிகளை தொடரும்.
-----------
இந்த பண்டிகை காலத்தில், நீண்ட தூரப் பயணங்களுக்கு இரண்டாவது ஓட்டுநரை வழங்க, விரைவுப் பேருந்து நிறுவனங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.
பேருந்து ஓட்டுநர்கள் எல்லா நேரங்களிலும் விழிப்புடன் இருப்பதையும், விபத்து அபாயத்தைத் தவிர்க்க சாலை விதிகளைக் கடைப்பிடிப்பதையும் உறுதிசெய்ய, சாலை போக்குவரத்துத் துறை அதிகாரிகள், கண்காணிபாளர்களாக பணியில் இருப்பர் என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
-------------
இவ்வேளையில், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, டோல் கட்டணம் விலக்களிப்பட்டுள்ளது.
வரும் 23-ஆம் தேதி நள்ளிரவு 12 மணி தொடங்கி, 24-ஆம் தேதி இரவு மணி 11.59 வரை, Bangunan Sultan Iskandar டோல் சாவடி மற்றும் Tanjung Kupang நெடுஞ்சாலைகளைத் தவிர்த்து, நாடு முழுவதுமுள்ள அனைத்து நெடுஞ்சாலைகளிலும், பயனர்கள் அந்த இலவச டோலை அனுபவிக்கலாம்.
---------
மற்றொரு நிலவரத்தில், அப்பண்டிகைக் காலகட்டதில், ஒரு நாளைக்கு 2.55 மில்லியன் வாகனங்கள், பிரதான நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் என மலேசிய நெடுஞ்சாலை ஆணையம் கணித்துள்ளது.
போக்குவரத்து நிலவரங்களைத் தெரிந்து கொள்ள, Astro Radio Traffic சமூக வலைத்தளங்களை வலம் வரலாம்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather