← Back to list
பண நோட்டுகள் தொடர்ந்து அச்சடிக்கப்படும்!
Dec 20, 2024

புதிய பண நோட்டுகள் தொடர்ந்து அச்சடிக்கப்படுமென, மத்திய வங்கி தெரிவித்துள்ளது !
மக்கள் மத்தியில் E-wallet போன்ற, ரொக்கமில்லா மின் கட்டண முறை பிரபலமாகியிருந்தாலும், புழக்கத்தில் விடுவதற்காக அவ்வாறு செய்யப்படுவதாக Bank Negara கூறியது.
மலேசியப் பொருளாதாரத்தைப் பொறுத்தவரை, ரொக்கம் என்பது தொடர்ந்து முக்கிய கட்டண முறையாக இருந்து வருமென, அது சொன்னது.
எனவே, மக்கள் கைகளில் எப்போதும் ரொக்கம் புழங்குவது உறுதிச் செய்யப்படும் என அந்த வங்கி உத்தரவாதமளித்தது.
நாட்டில் ஆகக் கடைசியாக, 2012-ஆம் ஆண்டு, புதிய வடிவமைப்போடு 1 ரிங்கிட், 5 ரிங்கிட், 10 ரிங்கிட், 20 ரிங்கிட், மற்றும் 100 ரிங்கிட் மதிப்புகளில், பண நோட்டுகள் வெளியிடப்பட்டன.
----------
MH370 விமானத்துக்கான தேடலை மீண்டும் தொடங்கும், Ocean Infinity-இன் புதிய திட்டத்திற்கு, மலேசியா கொள்கையளவில் ஒப்புக் கொண்டுள்ளது.
2014-இல் காணாமல் போன விமானத்தின் சிதைவைக் Ocean Infinity கண்டுபிடித்தால் மட்டுமே, அதற்கு அரசாங்கம் கட்டணம் செலுத்த வேண்டும் என போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் தற்போது விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இவ்வாண்டு இறுதிக்குள் அதன் தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
----------
ஆண்டு இறுதி மற்றும் கிறிஸ்துமஸ் விடுமுறையின் போது, நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து அதிகரிப்பை நிர்வகிக்க, தனது நான்காயிரம் பணியாளர்களை, PLUS மலேசியா களமிறக்கவுள்ளது.
தொடர்ந்து, 25 Smart Lane பாதைகளும் திறந்துவிடப்படும் என அது கூறியது.
சாதாரண நாட்களில் 1.85 மில்லியனுடன் ஒப்பிடும்போது, அந்த விடுமுறை நாட்களில், வாகனங்களின் எண்ணிக்கை நாளொன்றுக்கு 14 விழுக்காடு உயர்ந்து, 2.12 மில்லியனாக இருக்குமென அது சொன்னது.
---------
ஜொகூர் மற்றும் சபாவில் 47 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, துயர்துடைப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, சபா, சரவாக், லபுவானில், வரும் ஞாயிற்றுக்கிழமை வரை, தொடர் மழை பெய்யும் என Met Malaysia எச்சரிக்கை விடுத்துள்ளது.
----------
நாடு முழுவதும் நேற்று மட்டும் 1,700-க்கும் மேற்பட்ட சாலை விபத்துகள் பதிவு செய்யப்பட்ட வேளை, 9 மரணங்கள் பதிவானதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
---------
பேராக் பாரிட்டில் உள்ள பொது பல்கலைக்கழகமொன்றின் தங்கும் விடுதியில், மாணவர் ஒருவர் தனது நண்பர்களால் தாக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து, காவல்துறை மூவரைக் கைதுச் செய்துள்ளது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather