← Back to list
மோசமாகியிருக்கும் வெள்ளம் !
Nov 28, 2024

நாட்டில் வெள்ள நிலைமை மோசமாகி வருகிறது !
ஆகக் கடைசி நிலவரப்படி, அப்பேரிடரால் ஐம்பத்து ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆக அதிகமாக, கிளாந்தானில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 45-ஆயிரத்தைக் கடந்துள்ளது.
அடுத்ததாக, தெரெங்கானுவில் ஒன்பதாயிரத்தை நெருங்கியுள்ளது.
கெடாவில் தொள்ளாயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருன்கின்ற நிலையில், பெர்லிசில் 291 பேரும், ஜொகூரில் 28 பேரும், பேராக்கில் 20 பேரும், PPS மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
---------
இதனிடையே, இந்த வெள்ளப் பேரிடர், குறிப்பாக கிழக்குக்கரை மாநிலங்களில், 2014-ஆம் ஆண்டில் ஏற்பட்டதை விட மோசமாக இருக்கும் என அரசாங்கம் கணித்துள்ளது.
மலேசிய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள முன்னறிவிப்பின் அடிப்படையில், துணைப் பிரதமர் Datuk Seri Ahmad Zahid Hamidi அவ்வாறு கூறினார்.
---------
இவ்வேளையில், அதிகமாக வெள்ளத்தால் அவதியுறும் கிளாந்தான், தெரெங்கானு மற்றும் பஹாங்குக்கு, உதவி நடவடிக்கைகளுக்காக செல்ல, பேராக் தீயணைப்பு மீட்புக் குழு தயாராக உள்ளது !
Bagan Serai, Kuala Kangsar, Tapah-வைச் சேர்ந்த மூன்று குழுக்கள், அம்மாநிலங்களுக்குச் செல்ல தயாராக இருப்பதாக, அத்துறையின் இயக்குநர் தெரிவித்தார்.
--------
நாடு முழுவதும் ஆகஸ்டு வரை, மொத்தம் 2,240 பிள்ளைகள் கொடுமைப்படுத்தப்பட்ட சம்பவங்கள், சமூக நல்வாழ்வுத்துறை மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டுத் துறை அமைச்சர் Datuk Seri Nancy Shukri, அதனை தெரிவித்துள்ளார்.
--------
நாடு முழுவதும் நேற்று மட்டும் 1,800-க்கும் மேற்பட்ட சாலை விபத்துகள் பதிவு செய்யப்பட்ட வேளை, 11 மரணங்கள் பதிவானதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
-----------
Astro-வின் பங்குதாரரான ஆனந்த கிருஷ்ணன் தத்பரானந்தம், தனது 86-ஆவது வயதில் இன்று காலமானார்.
அவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு, Astro தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்டுள்ளது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather