← Back to list
விடுமுறை முடக்கம் !
Nov 27, 2024

தற்போது தொடங்கியுள்ள வடகிழக்கு பருவமழை காலத்திற்கு தாயாராக ஏதுவாக, பஹாங்கில் சுமார் எட்டாயிரம் அரசாங்க ஊழியர்களின் விடுமுறைகள் முடக்கப்பட்டுள்ளன.
அம்முடக்கம் அடுத்தாண்டு ஜனவரி மாதம் 15-ஆம் தேதி வரை வரை இருக்கும் என அம்மாநில அரசாங்கம் தெரிவித்துள்ளது.
எந்நேரத்திலும் ஏற்படக்கூடிய வெள்ளப் பேரிடரை எதிர்கொள்வதற்கு, முழு தயார்நிலையில் இருப்பதை உறுதி செய்ய அம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அது சொன்னது.
அப்பருவ மழைக்காலம் அடுத்தாண்டு மார்ச் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
--------
இதனிடையே, நாட்டின் சில மாநிலங்களில் வரும் வெள்ளிக்கிழமை வரை தொடர் மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதில், கிளாந்தான், தெரெங்கானு மற்றும் பஹாங்கில் கனத்த தொடர் மழை பெய்யலாம் என மலேசிய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
--------
மற்றொரு பக்கம், நாட்டில் சில மாநிலங்களில், இன்று இரவு 9 மணி வரை, இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
----------
இதனிடையே, நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 18-ஆயிரத்தைக் கடந்துள்ளது.
----------
UPNM, மலேசியத் தேசியத் தற்காப்புப் பல்கலைக்கழகத்தில், 3 பகடிவதை சம்பவங்களில் சம்பந்தப்பட்ட, 5 கேடட்களும் பல்கலைக்கழகத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளனர் !
---------
IPIC வழக்கிலிருந்து முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் ரசாக்குக்கும், முன்னாள் தேசிய கருவூலத்தின் செயலாளர் Tan Sri Mohd Irwan Serigar Abdullah-வுக்கும், கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் DNAA எனப்படும் விடுதலையற்ற விடுவிப்பு வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather