← Back to list
உணவுப் பொருட்களில் விலை உயர்வு !
Nov 11, 2024

ஜொகூரில் உள்ள MAMAK உணவகங்களில், அடுத்தாண்டு முதல் உணவு பொருட்களின் விலை, ஐந்து விழுக்காடு உயர வாய்ப்புள்ளது.
அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் முதல் குறைந்தபட்ச சம்பளம் 1,700 ரிங்கிட்டாக அமல்படுத்தப்படவுள்ள நிலையில், மூலப்பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரிக்கும் என மாநில இந்திய முஸ்லிம் தொழில்முனைவோர் சங்கத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
ஜொகூரிலுள்ள சுமார் 300 இந்திய முஸ்லிம் உணவகங்களில், செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், அடுத்தாண்டு முதல் குறைந்தபட்ச சம்பளத்தை அமல்படுத்துவது, இயக்கச் செலவுகளை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
அந்த விலை உயர்வைச் செயல்படுத்துவதற்கு தமது குழு இன்னும் காத்திருப்பதாகக் கூறிய அவர், அது குறித்து மலேசிய முஸ்லிம் உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் முடிவே இறுதியானது என்றார்.
--------
மலேசிய தேசிய தற்காப்பு பல்கலைக்கழகம் UPNM-மில் புதிதாக நிகழ்ந்ததாகக் கூறப்படும் பகடிவதை குறித்து, காவல் துறை ஒன்பது பேரிடமிருந்து வாக்குமூலம் பெற்றுள்ளது!
முன்னதாக 19 வயது மாணவன் மிதித்து பகடிவதை செய்யப்பட்டதில், அவனுக்கு எலும்பில் விரிசல் ஏற்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின.
அதற்கு முன்பே அதே பல்கலைக்கழகத்தில் இஸ்தெரி பெட்டியால் சூடு வைக்கப்பட்டு மாணவன் ஒருவன் பகடிவதை செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
---------
இதனிடையே, மாரா அறிவியல் கல்லூரியில் நிகழும் பகடிவதை சம்பவங்களை மறைக்கும், சம்பந்த்தப்பட்ட மாரா கல்லூரி முதல்வரும், கல்வி இயக்குநரும் பணிமாற்றம் செய்யப்படுவர் !
பகடிவதை சம்பவங்கள் மறைக்கப்பட்டது தெரிய வந்தால், கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாரா தலைவர் எச்சரித்துள்ளார்.
பகடிவதை சம்பவத்தில் தமது தரப்பு ஒருபோதும் விட்டுகொடுக்கும் போக்கினைக் கொண்டிருக்காது என அவர் மேலும் சொன்னார்.
-------
வழக்கறினர் ஒருவரை இழிவுப்படுத்தியதாகக் கூறப்படும் Inspector ஷீலாவை Selayang Magistrate நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
பாதிக்கப்பட்ட அந்த வழக்கறிஞர், அந்த Inspector-ருக்கு எதிரான வழக்கைத் தொடர விரும்பாத நிலையில், நீதிமன்றம் அத்தீர்ப்பை வழங்கியது.
---------
புதிய சட்டத்துறை தலைவராக Datuk Mohd Dusuki Mokhtar நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன் அப்பொறுப்பில் இருந்த Tan Sri Ahmad Terrirudin, கூட்டரசு நீதிமன்றத்தின் நீதிபதியாக பொறுப்பேற்றுகொண்டதை அடுத்து, Mohd Dusuki-க்கு அப்பதவி வழங்கப்பட்டுள்ளது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather