← Back to list
GISB விவகாரம் !
Oct 11, 2024
GISB நிறுவனத்தின் விவகாரம் தொடர்பில், அரச மலேசிய விசாரணை ஆணையத்தை அமைக்கும் திட்டம் எதுவும் அரசாங்கத்துக்கு இல்லை.
மாறாக, அடுத்த வாரம், உள்துறை, மத விவகாரங்கள் மற்றும் மகளிர் குடும்ப சமூக மேம்பாட்டு அமைச்சர்கள், அது குறித்த அறிக்கையை மக்களவையில் சமர்பிக்கவுள்ளனர்.
அதன் பின்னர், அவ்விவகாரம் குறித்து விவாதிக்க, MP-க்களுக்கு வாய்ப்பளிக்கப்படும்.
GISB நிறுவனத்தின் பராமரிப்பு இல்லங்களில் இருந்து, தவறான நோக்கத்திற்காக பயன்படுத்தப்பட்டு வந்த நூற்றுக்கணக்கான குழந்தைகள் மீட்கப்பட்டனர்.
அந்த சர்ச்சைக்குரிய நிறுவனம் குறித்து, காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.
-----------
இதனிடையே, சிலாங்கூர் கிள்ளானில், மூன்று குழந்தைகளை துன்புறுத்தி, பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் சந்தேக நபரை காவல்துறை வலைவீசி வருகிறது.
அக்குழந்தைகளை மீட்ட நபர் அளித்த புகாரின் பேரில், அத்துறை விசாரணையை தொடங்கியுள்ளது.
அச்சந்தேக நபர், அந்த குழந்தைகளை துன்புறுத்தும் காட்சிகள் அடங்கிய காணொலி ஒன்று, பரவலாகப் பகிரப்பட்டிருந்தது.
----------
கெடா, பெர்லிஸ், பேராக், ஜோகூரில் 3,400-க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கெடாவில் மட்டும் கிட்டத்தட்ட மூவாயிரம் பேர் பாதிக்கப்பட்டு, 19 வெவ்வேறு தற்காலிக துயர்துடைப்பு மையங்களில் அடைக்கலம் நாடியுள்ளனர்.
----------
சிலாங்கூர், புத்ராஜெயா, பஹாங், ஜொகூர், கிளந்தான், தெரெங்கானு, சபா, சரவாக்கில் கனமழை எச்சரிக்கை !
அம்மாநிலங்களின் பெரும்பாலான பகுதிகளில், இன்று மாலை ஏழு மணி வரை, இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என MetMalaysia கணித்துள்ளது.
--------
TikTok-கின் உள்ளடக்க மதிப்பாய்வு திறன்களை மேம்படுத்தும் நோக்கில், உலகளாவிய நிலையில் TikTok நிறுவனம், தனது பணியாளர்களை பணி நீக்கம் செய்து வரும் நிலையில், மலேசியாவில் அதன் தாய் நிறுவனமான ByteDance, 500-க்கும் மேற்பட்ட தனது ஊழியர்களை வேலையிலிருந்து நீக்கியுள்ளது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather