← Back to list
ஆய்வு கட்டத்தில் கல்வி மானியம் !
Oct 08, 2024
பணக்கார குழந்தைகளுக்கான கல்வி மானியத்தை நிறுத்துவது தொடர்பில் அரசாங்கம் எந்த முடிவும் எடுக்கவில்லை.
ஒருமைப்பாட்டு அரசாங்கத்தின் பேச்சாளர் Fahmi Fadzil அதனை தெரிவித்துள்ளார்.
பணக்கார குழந்தைகளுக்கான கல்வி மானியம் நிறுத்தப்படுவது குறித்து பிரதமர் அண்மையில் பேசியிருந்தார்.
அவ்விவகாரம் இன்னும் ஆய்வுக் கட்டத்தில் தான் உள்ளது.
ஏனெனில் பல கொள்கை ரீதியான விஷயங்கள், கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என அவர் கூறினார்.
----------
நாட்டின் பிரபல பெண் தொழிலதிபர் Datuk Sosilawati Lawiya மற்றும் அவரின் மூன்று உதவியாளர்களையும், கடந்த 14 வருடங்களுக்கு முன்பு, கொலை செய்த விவகாரம் தொடர்பாக, இரு குற்றவாளிகளுக்கு எதிரான மரண தண்டனை நிலைநிறுத்தப்படுவதாக, கூட்டரசு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கொலைக்கான காரணங்கள் மற்றும் தரவுகள் யாவும் முழுமையாக ஆராயப்பட்டுள்ளது;
அதனால் தங்களுக்கு எதிராக வழங்கப்பட்ட மரண தண்டனையை நீதித்துறை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று செய்து கொண்ட விண்ணப்பத்தை, கூட்டரசு நீதிமன்றம் நிராகரிப்பதாக நாட்டின் தலைமை நீதிபதி தெரிவித்தார்.
---------
பேராக் ஈப்போவில், கார் நிருத்துமிடத்திற்கான போட்டா போட்டியில், இன்னொரு பெண்ணைக் காயப்படுத்தியதாக, வழக்கறிஞர் ஒருவர் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
-------
RHB LEKAS HIGHWAY RIDE 2024 சைக்கிளோட்டப் போட்டியின் காரணமாக, சிரம்பான் - காஜாங் இடையிலான LEKAS நெடுஞ்சாலை, எதிர்வரும் 12 October மாலை 5 மணி முதல், 13 October அதிகாலை 4 மணி வரை, போக்குவரத்துக்கு மூடப்படுகிறது.
----------
உலகின் செல்வாக்குமிக்க 500 முஸ்லிம்களின் பட்டியலில், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், 15-ஆவது இடத்தில் உள்ளதாக, அரச இஸ்லாமிய மூலோபாய ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather