← Back to list
GISB; மாமன்னர் கவலை!
Sep 17, 2024

GISB நிறுவனத்தின் கீழ் இயங்கும் பராமரிப்பு மையங்களில், நூற்றுக்கணக்கான குழந்தைகள் தவறான நோக்கத்திற்காக பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுவது, கவலையளிப்பதாக மாமன்னர்  Sultan Ibrahim தெரிவித்துள்ளார். 
இதனிடையே, Selangor, Negeri Sembilan-னில் சோதனையிடப்பட்ட பராமரிப்பு மையங்களிலிருந்து மீட்கப்பட்ட, சுமார் 400 குழந்தைகளிடம் சுகாதார பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.  
அவர்களிடம் உடல் மற்றும் உணர்ச்சி ரீதியான வன்கொடுமைக்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளதாக, தேசிய காவல்படை தலைவர் தெரிவித்துள்ளார்.  
அவர்களில் கிட்டத்தட்ட 150 குழந்தைகள், நல்வாழ்வு அமைப்பின் தற்காலிக காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ள வேளை, எஞ்சியவர்கள், கோலாலம்பூரில் உள்ள காவல்துறை பயிற்சி மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக , Tan Sri Razarudin Husain கூறினார்.
-----------  
Halal என்பது மதுபானம், பன்றி இறைச்சி இல்லாத உணவுகளை மட்டுமே குறிப்பதல்ல என்கிறார் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம்! 
தற்போது, அது உணவு பாதுகாப்பு, தூய்மை மற்றும் ஆபத்தான தயாரிப்புகளைத் தவிர்ப்பதற்கான, நவீன முறைகளைப் பயன்படுத்துவதையும் குறிக்கின்றது என்றாரவர். 
இதனிடையே, Halal சான்றிதழ் அனைத்துலக அளவில் பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்டதை விட, கடுமையான தரங்களைக் கோருவதால், அது உலகளவில் போட்டித்தன்மையுடன் இருக்க முடியும் என்றும் அவர் கூறினார்.
---------- 
பினாங்கு Cherok To'kun-னில் புயல் நேரத்தில் நடைபயணத்தின் போது,  வடிகால் துளையில் விழுந்து, 50 வயது மாது  ஒருவர் உயிரிழந்துள்ளதை, அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். 
அங்கு கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில், அச்சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. 
--------  
இதனிடையே, அம்மாநிலத்தில் இன்று காலை வீசிய கடும் புயல் காரணமாக, நிறைய மரங்கள் வேரோடு சாய்ந்தன. 
அச்சம்பவத்தால் இரு கார்கள் சேதமடைந்த வேளை, யாரும் காயத்திற்குள்ளாகவில்லை. 
---------- 
அதே சமயம், நாட்டில் சில மாநிலங்களில் மாலை 7 மணி வரை, இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
Pahang, Negeri Sembilan, Melaka , Johor, Sabah, Sarawak, Labuan-நில் உள்ள சில பகுதிகளுக்கு அவ்வெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
             
            
              Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
              Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
              
                
                  
Weekdays
                
                
                7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
                
                  
Weekend
                
                8am, 9am, 10am, 11am, 12pm
               
              
              
              Weather