← Back to list
SPM-மே குறைந்தபட்ச தகுதி!
Sep 14, 2024
பொதுச் சேவை துறைகளில் சேருவதற்கு, SPM குறைந்தபட்ச தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக PT3 அல்லது PMR குறைந்தபட்ச தகுதியாக இருந்த 11 சேவைகளும் SPM-மாக மேம்படுத்தப்படும்.
சம்பந்தப்பட்ட பொதுச் சேவை துறைகளில், ஓட்டுநர்கள், செயல்பாட்டு உதவியாளார்கள், மற்றும் பாதுகாப்பு காவலர்கள் உள்ளதாக SSPA கூறியது.
----------
இதனிடையே, GISB நிறுவனத்தின் கீழ் உள்ள குழந்தைகளின் பெற்றோர்கள் உட்பட, தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாத பெற்றோர்கள் மீது, கல்வி அமைச்சு கடுமையான நடவடிக்கை எடுக்கும்.
நல்வாழ்வு அமைப்பின் கீழ் உள்ள குழந்தைகள் மற்றும் பதின்ம வயதினரை, பள்ளியில் பார்க்கவே முடியவில்லை என கூறப்பட்டு வருவதைத் தொடர்ந்து, அமைச்சு அவ்வாறு கூறியது.
GISB நிறுவனம் தொடர்பான விவகாரத்தை விசாரிக்க, காவல்துறைக்கு வழிவிடும்படி, உள்துறை அமைச்சர் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
----------
மற்றொரு பக்கம், அடுத்த மாதம் தாக்கல் செய்யப்படவிருப்பதாக நம்பப்படும் 2025 வரவு செலவுத் திட்டத்தில், படிவம் ஆறு மாணவர்களுக்கான உதவித்தொகையை கல்வி அமைச்சு முன்மொழியவுள்ளது.
---------
ஜொகூர் மக்கோத்தா சட்டமன்ற இடைத்தேர்தலில், பெரிக்காதான் நேசனலுக்கும், பக்காத்தான் ஹராப்பானுக்குமிடையே நேரடி போட்டி நிலவுகின்றது.
அங்கு முன்கூட்டியே வாக்களிப்பு செப்டம்பர் 24-ஆம் தேதி நடைபெறுகின்ற வேளை, செப்டம்பர் 28-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
---------
பேராக் ஈப்போவில், தாம் மலேசிய தொடர்பு பல்லூடக ஆணைய அதிகாரி என கூறிக்கொண்டு வந்த அழைப்பை நம்பி, 37 வயது பெண் 3 லட்சத்து 50-ஆயிரம் ரிங்கிட்டுக்கும் அதிகமான பணத்தை பறிகொடுத்துள்ளார்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather