← Back to list
பேருந்து ஓட்டுநர் மீண்டும் நீதிமன்றத்தில்!
Sep 12, 2024
பெற்றோரின் அனுமதியின்றி வயது குறைந்த மாணவிகளை வைத்து உள்ளடக்கங்களை பதிவு செய்து வந்ததாக, குற்றஞ்சாட்டப்பட்ட பள்ளி பேருந்து ஓட்டுநர், இன்று மீண்டும் Sesyens நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டுள்ளார்.
பள்ளி மாணவிகளை வைத்து பதிவிட்டு வந்த காணொலிகளில் ஒன்றில், Caption எனப்படும் தலைப்பு கருத்தை அசௌகரியமான முறையில் பதிவிட்டதாக, அவ்வாடவர் இம்முறை குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறார்.
அவர் தம்மீதான குற்றத்தை மறுத்தார்.
பள்ளி மாணவிகளை காணொலியாகப் பதிவுச் செய்து, தனது TikTok-கில் பதிவேற்றிய அந்த 24 வயது பேருந்து ஓட்டுநர் மீது, குழந்தைகள் மீதான உடல் மற்றும் உடல் சாரா பாலியல் வன்கொடுமை என முன்னதாக, இரு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
--------
Johor Pagoh-வில் உறவுக்கார பிள்ளையை காயப்படுத்தியதற்காக, ஆடவர் ஒருவருக்கு 9 ஆண்டுகள் சிறை மற்றும் ஐயாயிரம் ரிங்கிட் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
48 வயதான அவ்வாடவர், தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதை அடுத்து, அத்தீர்ப்பு வழங்கப்பட்டது.
அவ்வாடவர் மூவரைக் கொன்று சம்பந்தப்பட்ட வீட்டை எரித்ததாக முன்னதாக, குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார்.
----------
Negeri Sembilan Seremban-னில் உள்ள பராமரிப்பு மையமொன்றில், நான்கு குழந்தைகளை உடல் ரீதியாகக் காயப்படுத்தியாக, பதின்ம வயது பெண் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
அவர் தம்மீதான குற்றச்சாட்டை மறுத்தார்.
குற்றஞ்சாட்டப்பட்ட அந்த 19 வயது பெண், அந்த குழந்தைகளின் கைகளில் சூடான இரும்புக் கரண்டியை வைத்து, தீக்காயங்களை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
----------
நாடு முழுவதும் நேற்று மட்டும் 1,800-க்கும் மேற்பட்ட சாலை விபத்துகள் பதிவு செய்யப்பட்டன.
அதில் 12 மரணங்கள் பதிவானதாக, அரச மலேசிய காவல்படியின் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாகத் துறை தெரிவித்துள்ளது.
----------
பன்றி இறைச்சி மற்றும் மதுபானம் விற்காத அனைத்து உணவகங்களுக்கும் Halal சான்றிதழைக் கட்டாயமாக்கும் விவகாரத்தை, அரசியலாக்க வேண்டாம் என துணை பிரதமர் மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
தற்போதைக்கு அது மறு ஆய்வு செய்ய வேண்டிய ஒரு முன்மொழிவு திட்டமே தவிர, அதிகாரப்பூர்வமான கொள்கை அல்ல என Datuk Seri Dr Zahid Hamidi கூறினார்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather