← Back to list
Johor துர்நாற்ற மாசுபாடு !
Sep 11, 2024
Johor Bahru-வில் துர்நாற்ற மாசுபாட்டை ஏற்படுத்திய ரசாயண கழிவுகளைத் துப்புரவுப்படுத்த, ஒரு வாரம் பிடிக்கும்.
துப்புரவுப்படுத்தும் பணிகள் நடந்துகொண்டிருக்கும் இரண்டு பகுதிகளில் இருந்து சற்று தள்ளியே இருக்கும்படி மாநில அரசாங்கம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
தலைச்சுற்றல், குமட்டல், மூச்சு விடுவதில் சிரமம், நெஞ்சுவலி போன்ற உபாதைகள் எதிர்கொள்பவர்கள், மருத்துவ சிகிச்சையை நாடும்படி அறிவுறுத்தப்படுகின்றனர்.
------
இதனிடையே, அம்மாசுபாடு காரணத்தால் மூடப்பட்ட மூன்று பள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்லை!
இன்று வரை அப்பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டிருப்பதாகத் தெரிவித்த ஊர் தலைவர், பெற்றோர்களும் ஆசிரியர்களும் பள்ளி திறக்கும் தேதி குறித்து அந்தந்த பள்ளி நிர்வாகங்களிடம், கேட்டுத் தெரிந்துக் கொள்ளுமாறு சொன்னார்.
அதன் தொடர்பில் நேற்று இருவர் கைது செய்யப்பட்டு, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
-------
Selangor Shah Alam Seksyen 7-இல் மூடப்பட்டிருந்த Taman Tasik, தற்போது பொதுமக்களுக்கு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, முதலை ஒன்று அங்கு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அந்த இடம் பொதுமக்களுக்கு மூடப்பட்டிருந்தது.
---------
நாடு முழுவதும் நேற்று மட்டும் 1,800-க்கும் மேற்பட்ட சாலை விபத்துகள் பதிவு செய்யப்பட்டன.
அதில் 9 மரணங்கள் பதிவானதாக, அரச மலேசிய காவல்படையின் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாகத் துறை தெரிவித்துள்ளது.
--------
இதனிடையே, மலாக்காவில், தூக்கக் கலக்கத்தில் காரோட்டிச் சென்ற நபர், Syed Abdul Aziz மேம்பாலத்திலிருந்து கீழே விழுந்து, காயங்களுடன் உயிர் தப்பினார்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather