← Back to list
இடுகைகளைப் பதிவிடுவதில் கவனம்!
Sep 06, 2024

 
Content Creators எனப்படும் சமூக ஊடக உள்ளடக்க பதிவாளர்கள்,  குறிப்பாக ஆசிரியர்கள், குழந்தைகள் இடம்பெறும் இடுகைகளை பதிவேற்றும் போது கவனம் ! 
தொடர்புத் துறை அமைச்சு அந்த நினைவூட்டலை வழங்கியுள்ளது. 
குழந்தைகளின் படங்களை வெளியிடுவது தொடர்பான சட்டத்தை அவர்கள் மீறாமல் இருப்பதை உறுதிச் செய்யவே, அந்த நினைவூட்டல் என அதன் அமைச்சர் Fahmi Fadzil தெரிவித்துள்ளார். 
பெற்றோரின் அனுமதியின்றி மாணவிகளை காணொலியாகப் பதிவுச் செய்து வந்த பள்ளி பேருந்து ஓட்டுநர் ஒருவர் கைதானைத் தொடர்ந்து, அவர் அவ்வாறு சொன்னார். 
அந்நபர் விசராணைக்கு உதவ இன்று முதல் ஐந்து நாட்களுக்கு தடுத்து வைக்கப்படுகிறார். 
--------   
KL Masjid India நில அமிழ்வில் சிக்கிக் காணாமல் போன இந்திய பிரஜை விஜயலட்சுமியின் குடும்பத்தினர், இந்தியாவுக்கு திரும்புவதற்கு முன்பே, நன்கொடைகளைப் பெற்றனர். 
அதில் கோலாலம்பூர் மாநகர் மன்றம் வழங்கிய முப்பதாயிரம் ரிங்கிட்டும், சில பெறுநிறுவனங்களின் நன்கொடைகளும் அடங்கும் என கூட்டரசு பிரதேச அமைச்சர் Dr Zaliha Mustafa கூறினார்.  
--------   
அதே வேளை, Masjid India பகுதி இன்னும் பாதுகாப்பாக தான் இருப்பதாகவும், அங்குள்ள கடைகள் அல்லது கட்டிடங்களை மூட உத்தரவிடப்படவில்லையெனவும், கோலாலம்பூர் மாநகர் மன்ற தலைவர் மீண்டும் தெரிவித்துள்ளார். 
மீட்சி மற்றும் மறுகட்டமைப்பு பணிகளுக்காக, சம்பவ இடத்திலிருந்து 200 மீட்டர் தூரத்திற்கு மட்டுமே மூடப்பட்டிருப்பதாக அவர் கூறினார். 
---------   
நாட்டில் குரங்கம்மை அல்லது MPOX நோய் கண்ட சந்தேகத்தின் பேரில் அனுமதிக்கப்பட்ட 46 பேருக்கு, அந்நோய் தொற்று இருக்கவில்லை என்பதை சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியிருக்கிறது.  
எனவே, நாட்டில் இதுவரை Mpox சம்பவங்கள், கடந்தாண்டு இறுதியில் பதிவான அதே ஒன்பது சம்பவங்களாக நீடிக்கின்றன.  
--------- 
நாடு முழுவதும் நேற்று மட்டும் 1,700-க்கும் மேற்பட்ட சாலை விபத்துகள் பதிவு செய்யப்பட்ட வேளை, 7 மரணங்கள் பதிவானதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
             
            
              Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
              Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
              
                
                  
Weekdays
                
                
                7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
                
                  
Weekend
                
                8am, 9am, 10am, 11am, 12pm
               
              
              
              Weather