← Back to list
MFL புதிய CEO !
Sep 05, 2024

 
மலேசிய காற்பந்து லீக்கின், புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக, லாலீகாவின் முன்னாள் பிரதிநிதி Giorgio Pompili, நியமிக்கப்பட்டுள்ளார். 
அப்பதவியில் இருந்த Datuk Stuart Ramalingam-மின் ஒப்பந்தம் முடிவடைந்ததை அடுத்து, Pompili தற்போது அவரிடத்தை நிரப்பியிருக்கிறார். 
Pompili-லுக்கு காற்பந்து துறையில் இருக்கும் அனுபவமே, அந்நியமனத்திற்குக் காரணம் என MFL தலைவர் தெரிவித்தார்.
----------- 
பாரிஸ் பாராலிம்பிக் போட்டியில், ஆடவருக்கான 50 மீட்டர் S5 Freestyle பிரிவில், நாட்டின் பாரா நீச்சல் வீரர் Nur Syaiful Zulkafly, Heats-சில் ஒட்டுமொத்தமாக 8-ஆவது இடைத்தை பிடித்து, இறுதிச் சுற்றுக்குத் தகுதிப் பெற்றுள்ளார்.
---------- 
Man United-டின் Antony-யை இரவலில் ஒப்பந்தம் செய்ய, Fenerbache நிர்வாகி Jose Mourinho, ஆர்வமாக இருப்பதாக செய்திகள் வலம் வருகின்றன. 
துருக்கியேவின், ஆட்டக்காரர்களை வாங்கும் விற்கும் தவணை அடுத்த வாரம் முடிவடையவிருக்கும் நிலையில், அதற்குள் Mourinho அவரை ஒப்பந்தம் செய்து விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
----------- 
David Moyes, தனது முன்னாள் கிளப்பான Everton-னுக்குத் திரும்பலாம். 
11 ஆண்டுகளுக்கு முன்பு,  Manchester United-டை நிர்வகிப்பதற்காக Everton-னிலிருந்து வெளியான Moyes-சை மீண்டும் கொண்டு வர, அணி வாரியம் தீவிரமாகப் பரிசீலித்து வருகிறதாம். 
புதிய பிரிமியர் லீக் பருவம் தொடங்கி நடந்த மூன்று ஆட்டங்களிலும், Everton  தொடர் தோல்வியை பதிவுச் செய்ததை அடுத்து, அவ்வணியின் நிர்வாகி Sean Dyche-இன் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. 
             
            
              Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
              Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
              
                
                  
Weekdays
                
                
                7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
                
                  
Weekend
                
                8am, 9am, 10am, 11am, 12pm
               
              
              
              Weather