← Back to list
சிறுவன் காரோட்டி விபத்து !
Sep 05, 2024
Negeri Sembilan Seremban-னில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய, 10 வயது சிறுவனின் தாயார், விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
அச்சிறுவனின் தந்தை உடல் நலக் குறைவாக இருப்பதால், விசாரணைக்கு அழைக்கப்படவில்லையெனவும், அவனின் தாயார் தடுத்து வைக்கப்படலாம் எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
அச்சிறுவன் ஓட்டி வந்த கார், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்ற கார்களோடு மோதியதில், அவன் காயமெதுவுமின்றி தப்பினான்.
-----------
KL Masjid India நில அமிழ்வு சம்பவம் நடந்த இடத்திலிருந்து தள்ளியே இருக்கும்படி, சமூக ஊடக பதிவுகளுக்காக வருபவர்கள் கேடுக்கொள்ளப்படுகின்றனர்.
தங்களின் சொந்த பாதுகாப்புக்காகவும், அங்கு நடைபெற்று வரும் மீட்பு மற்றும் மறுகட்டமைப்புப் பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் இருக்கவும், அவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளதாக, காவல்துறை தெரிவித்துள்ளது.
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிச் செய்ய, அவ்விடத்தைச் சுற்றி காவல் அதிகாரிகள் பணியமர்தப்பட்டுள்ளனர்.
-----------
Pahang Cameron Highlands தற்போது வெப்பமடைந்து வருவதாக, சுற்றுச்சூழல் குழு ஒன்று தெரிவித்துள்ளது.
விவசாயம் மற்றும் சுற்றுச்சூழல் சுற்றுலாத் திட்டங்களுக்காக, காடுகளை அழித்து வருவதே அதற்குக் காரணம் என அக்குழு சொன்னது.
பகல்நேர வெப்பநிலை முன்பு 20 பாகை செல்சியசாக இருந்த நிலையில், தற்போது 24 பாகை செல்சியசாக உயர்ந்துள்ளது.
---------------
தலைநகர் Kepong வீட்டுப் பகுதியில், கார் நிறுத்துமிடத்திற்காக ஏற்பட்ட தகராறில், பகுதி நேர பணியாளரை வெட்டியதாகக் கூறப்படும் ஆடவர் ஒருவர் கைதாகியுள்ளார்.
-----------
நாடு முழுவதும் நேற்று மட்டும் 1,700-க்கும் மேற்பட்ட சாலை விபத்துகள் பதிவு செய்யப்பட்ட வேளை, 12 மரணங்கள் பதிவானதாக, காவல்துறை தெரிவித்துள்ளது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather