← Back to list
சீ போட்டிக்கு 700 மில்லியன் செலவு!
Aug 29, 2024

 
கோலாலம்பூர், பினாங்கு, சபா, சரவாக் ஆகிய மாநிலங்களில் அரங்கேற்றப்படும், 2027 சீ விளையாட்டுப் போட்டியை நடத்துவதற்கு 700 மில்லியன் செலவாகும். 
அந்த முழு தொகையில், பாதிக்கும் மேல் அந்தந்த மாநில அரசாங்கங்களே செலுத்தும் என இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. 
அப்போட்டிக்கு சரவாக், 300 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கும். 
இதனிடையே, சபா, பினாங்கு ஆகிய மாநிலங்கள், முறையே 100 மில்லியன் மற்றும் 15 மில்லியன் ரிங்கிட் தொகையை செலுத்தும். 
அப்போட்டி, மலேசியாவில் நடத்தப்படுவது, இது ஏழாவது முறையாகும். 
கடைசியாக, 2017-ஆம் ஆண்டுதான், மலேசியா அப்போட்டியின் உபசரணை நாடாக இருந்தது குறிப்பிடத்தக்கது. 
--------  
கொரியா பொது பூப்பந்து போட்டியில், தேசிய மகளிர் இரட்டையர் Pearly Tan/M.Thinaah, எதிரணியினரை மூன்று செட்களில் வீழ்த்தி, காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர். 
இவ்வேளையில், கலப்பு இரட்டையர் Chen Tang Jie/Toh Ee Wei-யும், Goh Soon Huat/Shevon Lai-யும் காலிறுதிக்கு தகுது பெற்றுள்ள வேளை, Tan Kian Meng/Lai Pei Jing தோல்வியுற்றனர். 
--------  
இன்று தொடங்கிய மாற்றுத் திறனாளிகளுக்கான, பாராலிம்பிக் போட்டியின் குழுநிலை ஆட்டத்தில், தேசிய மாற்றுத்திறனாளி பூப்பந்து வீரர்  Cheah Liek Hou, போலாந்து வீரரை நேர் செட்களில் வீழ்த்தி வெற்றிப் பெற்றுள்ளார். 
சக நாட்டு வீரர் Fareez Anuar-ரும் தொடக்க ஆட்டத்தில் வெற்றிப் பெற்றார். 
             
            
              Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
              Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
              
                
                  
Weekdays
                
                
                7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
                
                  
Weekend
                
                8am, 9am, 10am, 11am, 12pm
               
              
              
              Weather