← Back to list
நில அமிழ்வு சம்பவம் மீண்டும் நிகழக்கூடாது!
Aug 28, 2024

 
KL Masjid India சுற்று வட்டாரப் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட வேண்டும்.
இனி வரும் காலங்களில் நில அமிழ்வுச் சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க அது முக்கியம். 
எனவே, அப்பகுதியை நன்கு ஆய்வுச் செய்யக் கோரி, KL மாநகர மன்றத் தலைவருக்கு கடிதமொன்றை அனுப்பியிருப்பதாக, மலேசிய இந்திய முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்,  Datuk Seri HJ. Syed Ibrahim Kader, ராகா செய்திப் பிரிவிடம் தெரிவித்துள்ளார். 
கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நில அமிழ்வு சம்பவத்தை அடுத்து, அங்குள்ள மக்கள் பீதியில் உள்ளதாகவும், அதனால் அங்கு தொழில் செய்பவர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் கூறியுள்ளார் அவர். 
அச்சம்பவம் நடந்த இடத்துக்கு ஏறக்குறைய ஐம்பது மீட்டர் தூரத்தில், இன்னொரு புதிய அமிழ்வு சம்பவம் நிகழ்ந்திருப்பதை அடுத்து, அவ்வளாகத்தைச் சுற்றியுள்ள சாலை போக்குவரத்துக்கு மூடப்பட்டுள்ளது. 
நில அமிழ்வில் சிக்கிக் காணாமல் போயுள்ள 48 வயது விஜயலட்சுமியைத் தேடிக் கண்டுபிடிக்கும் பணிகள், இன்று ஆறாவது நாளாகத் தொடருகின்றன. 
--------- 
பேராக் ஈப்போவில், குழந்தை ஒன்று துணியால் சுற்றப்பட்ட நிலையில், மண்ணுக்குள் புதையுண்டிருப்பதை கண்டு, வீட்டு வாடைகையாளர் ஒருவர் அதிர்ச்சிக்குள்ளானார். 
தாம் வீட்டு வெளிப்பகுதியை மறுசீரமைத்துக்கொண்டிருந்த சமயம், அக்குழந்தை உள்ளே இருப்பதை கண்டறிந்துள்ளதாக அவர் கூறினார்.
அது குறித்து அவர் இன்று நண்பகல் 12 வாக்கில் காவல்துறையிடம் புகாரளித்தார். 
-------- 
ஐந்து மணிநேரம் அல்லது அதற்கும் மேல் விமானங்கள் தாமதமானால், பயணிகளின் பணம், விமான நிறுவனங்கள் திருப்பி கொடுக்க வேண்டும்! 
அந்நிறுவனங்களுக்கு அடுத்த வார திங்கட்கிழமை, அதன் கோரிக்கை விடுக்கப்படும் என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
விமான தாமதமானால், பயணிகள் தங்களின் பணத்தை திரும்பப் பெறுவதா அல்லது பயணத்தை தொடருவதா என்பதை முடிவுச் செய்யலாம். 
பயணிகளின் உரிமைகளை மேம்படுத்துவதற்கும், விமான நிறுவனங்கள் அதிக பொறுப்புணர்வோடு செயல்பட வைக்கவும், அது வழிவகுக்கும் என அவர் கூறினார். 
--------- 
சபாவில், இளம்பெண்ணை பலாத்காரம் செய்த சந்தேகிக்கப்படும், 15 வயது சிறுவன் உட்பட மூவர் கைதாகியுள்ளனர். 
கடந்த வெள்ளிக்கிழமை, அவ்விளம்பெண் காணாமல் போனதாக முன்னதாக கூறப்பட்டிருந்தது. 
             
            
              Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
              Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
              
                
                  
Weekdays
                
                
                7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
                
                  
Weekend
                
                8am, 9am, 10am, 11am, 12pm
               
              
              
              Weather