← Back to list
ஆறாவது நாள் இன்று!
Aug 28, 2024
தலைநகர், Jalan Masjid India நில அமிழ்வில் காணாமல் போன மாதுவைத் தேடி மீட்கும் பணிகள் இன்று காலை ஆறாவது நாளாகத் தொடர்கிறது!
கனத்த மழை காரணமாக நேற்று மாலை மணி 7.30 வாக்கில் தேடல் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
இன்றைய தேடல் சம்பவம் நடந்த இடத்தையும், Pantai Dalamமில் உள்ள IWK கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலை பகுதியையும் மையமாகக் கொண்டு நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை காலை மணி எட்டு அளவில், அப்பகுதியில் நிலம் திடீரென உள்வாங்கிக் கொண்டதில் இந்திய சுற்றுப்பயணியான 48 வயது மாது சிக்கிக் கொண்டார்.
-------
இதனிடையே சம்பவம் நடந்த இடத்துக்கு ஏறக்குறைய ஐம்பது மீட்டர் தூரத்தில், புதிய அமிழ்வு சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது!
தொடர் மழையை அடுத்து, இன்று அதிகாலை மணி இரண்டு முப்பது வாக்கில் அச்சம்பவம் நிகழ்ந்ததாக நம்பப்படுகிறது.
அசம்பாவிதங்களைத் தவிர்க்க சம்பந்தப்பட்ட இடத்தை சுற்றி பொதுமக்கள் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
--------
பள்ளிகளில் கைப்பேசிகளுக்குத் தடை விதிக்கும் முடிவுக்கு பாதிக்கும் அதிகமான மலேசியர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்!
IPSOSசின் அண்மைய ஆய்வில் கலந்து கொண்டவர்களில் 51 விழுக்காட்டினர், அத்தடைக்கு ஆதரவாக பதிலளித்துள்ளனர்.
38 விழுக்காட்டினர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
அந்த ஆய்வில் கலந்து கொண்ட மலேசியர்களில் 41 விழுக்காட்டினர் செயற்கை நுண்ணறிவால் கல்வித்துறையில் நேர்மறை தாக்கங்களைக் கொண்டு வர முடியு என நம்புகின்றனர்.
-------
நாட்டில் இதுவரை குரங்கம்மை தொற்றுக்கு ஆளாகியிருந்த 33 பேருக்கு, அத்தொற்று தற்போது இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது!
மேலும் ஒருவரது குறித்த முடிவு இன்னும் வெளிவரவில்லை என, சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
--------
பஹங் குவாந்தானில், இல்லாத முதலீட்டுத் திட்டத்தை நம்பி, வேலையில்லா ஆடவர் ஒருவர் கிட்டத்தட்ட மூன்றரை லட்சம் ரிங்கிட்டை இழந்துள்ளார்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather