← Back to list
அப்பெண்ணை தேடும் பணி ஓய்ந்தபாடில்லை!
Aug 26, 2024

 
தலைநகர் Jalan Masjid India நில அமிழ்வில் காணாமல் போன மாதுவை தேடி கண்டுபிடிக்க, அதிகாரிகள் பல வழிகளை முயற்சித்து வருகின்றனர். 
சம்பவ இடத்தின் பாதையில் உள்ள குப்பைகள் அடைப்பை உடைக்க, கழிவுநீர் ஜெட் இயந்திரத்தைப் பயன்படுத்துவதும் அதிலடங்கும். 
Flushing எனப்படும் புதிய முறையையும், தேடல் மீட்புப் படை இரு முறை கையாண்டது. 
ஆனால், அதிலும் எந்த முன்னேற்றங்களும் காணப்படவில்லையென KL மாநகர் மன்றம் தெரிவித்தது.  
இதனிடையே, சிங்கப்பூரைச் சேர்ந்த, கழிவு மேலாண்மை நிறுவனம் ஒன்று, தேடல் மீட்புப் பணிகளுக்கு உதவ முன்வந்துள்ளது. 
Flushing முறையில் தங்களுக்கு இருக்கும் நிபுணத்துவத்தைப் பகிர்ந்துகொள்ள, தன்னார்வ அடிப்படையில், அந்நிறுவனம் முன்வந்துள்ளது. 
நில அமிழ்வில் சிக்கிக்கொண்ட 48 வயது இந்திய நாட்டுப் பெண்மணியை தேடும் பணிகள் நான்காவது நாளாக தொடர்கின்றன.
---------   
பல இடைநிலைப்பள்ளி மாணவர்கள், வக்குப்பில் கவனம் செலுத்த முடியாமல் போவதற்கு Ketum பயன்பாடு ஒரு காரணமாகலாம். 
அதன் பயன்பாட்டினால், மாணவர்களை மந்தமாகவும், ஆக்ரோஷமாகவும் மாற்றுவதாக, தேசிய போதைப்பொருள் தடுப்பு நிறுவனத்தின் ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது. 
அதிலே என்ன கவலைக்குறிய விஷயமென்றால், இளைஞர்கள் அவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடும்போது, அவரகள் தங்களுடைய நண்பர்களையும் அதில் சேர்த்துக்கொள்கிறார்கள் என அந்நிறுவனம் கூறியது. 
---------  
முன்னாள் பிரதமர் Tan Sri Muhyiddin Yassin, நாளை குற்றஞ்சாட்டப்படவிருப்பதை, அரச மலேசிய காவல்படை தலைவர் Tan Sri Razarudin Husain உறுதிப்படுத்தியுள்ளார். 
Kelantan Nenggiri சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது, அந்த Bersatu கட்சித் தலைவர், 3R எனப்படும், இனம் மதம் அரச முறையை தொட்டு பேசியதாக முன்னதாக செய்திகள் வெளிவந்தன.  
---------   
கெடா Alor Setar-ரில் தனது மனைவி மற்றும் இரு பிள்ளைகளைக் கொன்ற சந்தேகத்தின் பேரில் கைதான Rohingya ஆடவரின் தடுப்புக் காவல், இன்னும் 7 நாட்களுக்கு நீட்டிக்கப்படுகிறது.   
----------   
நாடு முழுவதும் நேற்று மட்டும் நேற்று மட்டும் 1,300-க்கும் மேற்பட்ட சாலை விபத்துகள் பதிவுச் செய்யப்பட்ட வேளை, 12 மரணங்கள் பதிவானதாக, காவல்துறை தெரிவித்துள்ளது.  
             
            
              Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
              Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
              
                
                  
Weekdays
                
                
                7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
                
                  
Weekend
                
                8am, 9am, 10am, 11am, 12pm
               
              
              
              Weather