← Back to list
தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களுக்கான பயிலரங்கு!
Aug 23, 2024
Muallim மற்றும் Batang Padang மாவட்ட அளவிலான, தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களுக்கான பயிலரங்கு நாளை UPSI பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிறது.
அப்பயிலரங்கை நாடு முழுவதும் கொண்டு செல்லவும் திட்டம் இருப்பதாக பேராசிரியர் டத்தோ டாக்டர் N.S.ராஜேந்திரன் தெரிவித்தார்.
தமிழ்க் கல்வி மேம்பாட்டு நடுவம், Muallim மற்றும் Batang Padang மாவட்ட தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் கழக ஏற்பாட்டில், அப்பயிலரங்கு நாளை சனிக்கிழமை காலை 8 மணியிலிருந்து மாலை 4 மணி வரை நடைபெறுகிறது.
-----------
மாநகரின் வடிகால் மற்றும் கழிவுநீர் அமைப்பை, முழுமையாக சோதனை செய்யும்படி கோலாலம்பூர் மாநகர் மன்றத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆட்களை மூழ்க வைக்கும் குழிகள் போன்ற பிரச்சனைகளைத் தடுக்க அவ்வாறு செய்ய தாம் தெரிவித்துள்ளதாக Bukit Bintang நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
இன்று காலை Masjid India அருகே, இந்திய நாட்டு பெண் ஒருவர், ஆழமான குழியில் விழுந்து உயிரிழந்த சம்பவத்தை அவர் மேற்கோள்காட்டினார்.
48 வயதான அப்பெண்ணை தேடும் முயற்சிகள் இன்னும் நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
----------
தலைநகர் Taman Bunga Raya-வில் நிலச்சரிவு ஏற்பட்டதை அடுத்து, அங்கு வசிக்கும் 52 குடியிருப்பாளர்கள் தற்காலிகமாக, அவ்விடத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அப்பகுதி மக்களின் பாதுகாப்புக் கருதி, அவ்வுத்தரவு வழங்கப்பட்டுள்ள நிலையில், அங்கு சுத்தம் செய்யும் பணிகள் நடந்து வருவதாக,காவல்துறை தெரிவித்தது.
---------
Rahmah உதவித் தொகை, 3-ஆம் கட்டமாக 29-ஆம் தேதி ஆகஸ்ட் மாதம் முதல், 80 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு விநியோகிக்கப்படவுள்ளது.
அத்திட்டத்தில் புதிதாக இணைந்தவர்களுக்கும், அதற்கு மேல்முறையீடு செய்தவர்களுக்கும் செம்டம்பர் 19-ஆம் தேதி முதல் அத்தொகை வழங்கப்படும்.
----------
இந்தியாவிலும், வங்காளதேச கிழக்கு பகுதியிலும், வெள்ளத்தால் 15 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தவித்து வருகின்றனர்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather